மலேசியாவில் கட்டுமான பணியாளர், ஹெல்பர், வெல்டர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மலேசியாவில் பணிபுரிய கட்டுமானப் பணியாளர், ஹெல்பர், வெல்டர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மலேசியாவில் பணிபுரிய கட்டுமானப் பணியாளர், கட்டுமான ஹெல்பர், வெல்டர் ஆகிய பணி களுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது.

மலேசியாவில் பணிபுரிய 10-ம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் படித்துள்ள அனுபவம் அல்லது பணி அனுபவம் இல்லாத 50 வயதுக்கு உட்பட்டோர் இந்த வேலைக்கு தேவைப்படுகிறார்கள். கட்டுமானப் பணியாளருக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரம், கட்டுமான ஹெல்பர் வேலைக்கு ரூ.28 ஆயிரம், வெல்டர் வேலைக்கு (வெல்டர் தகுதிச் சான்று வைத்திருப்பவர்கள்) ரூ.40ஆயிரம் வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு, விசா ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

இப்பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சுய விவர விண்ணப்பப் படிவம், கல்வி,பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகலுடன் வரும் 26-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505886, 22502267) மற்றும் வாட்ஸ்அப் எண்ணில் (9566239685) தொடர்பு கொள்ளலாம். இது ஓர் அரசு நிறுவனம்என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் இடைத்தரகரோ ஏஜெண்டுகளோ எவரும் இல்லை.

எனவே, விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்தநிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பிறகு இந்த நிறுவனத்திற்கு சேவை கட்டணமாக ரூ.35,400செலுத்த வேண்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in