

சென்னை: பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை பொறியாளர் (சிவில்,மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல்) பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமா பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 18-ம் தேதி.
கூடுதல் விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.