

வேலூர்: புதிய நிதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வழிகாட்டுதலின் படி ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் ஏ.சி.எஸ். அருண் குமார் தலைமையில் ஏ.சி.எஸ். மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (9-ம் தேதி) வேலூர் டான் பாஸ்கோ உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பெங்களூரு, ஓசூர், சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன.
வேலூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பொறியியல், கலை மற்றும் அறிவியல், மேலாண்மை, ஆர்க்கிடெக்சர், நர்சிங், பிசியோதெரபி, பார்மசி, இதர மருத்துவ துணை படிப்புகள், டிப்ளமோ, ஐடிஐ, பள்ளிப்படிப்பு முடித்த அல்லது கைவிட்ட மற்றும் அனுபவம் இல்லாத அல்லது அனுபவம் உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்பவர்கள் ஆதார் அட்டை மற்றும் சான்றிதழ் நகல்கள், போட்டோ, சுயவிவர குறிப்பு தேவையான அளவு கொண்டு வரவேண்டும்.
பங்கேற்கும் நிறுவனங்கள் நிறுவனம் வழங்கும் பயிற்சியை வேகமாக கற்றுக்கொள்ள வேண்டும், கடினமான சூழ்நிலைகளை கையாளுதல், தன்னம்பிக்கையுடன் தெளிவாக பேசுதல் உள்ளிட்டவற்றில் தங்களை தயார்படுத்திக் கொண்டு வரவேண்டும். போட்டியாளர்கள் நேர்காணலில் வெற்றி பெற ஏ.சி.எஸ்.மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக வாழ்த்துகிறோம்.