சென்னையில் 6-ம் தேதி வேலைவாய்ப்பு கண்காட்சி

சென்னையில் 6-ம் தேதி வேலைவாய்ப்பு கண்காட்சி
Updated on
1 min read

மத்திய அரசின் எம்எஸ்எம்இ துறையின்கீழ் செயல்படும் தேசிய சிறுதொழில் கழகத்தின் (என்எஸ்ஐசி) தொழில்நுட்ப சேவை மையம் சென்னை கிளையின் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் (எம்எஸ்எம்இ) துறைக்குத் தேவையான பணியாளர்களுக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், தொழில்முனைவோர் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில், தேசிய சிறுதொழில் கழகத்தின் சார்பில், வரும் 6-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு கண்காட்சி நடைபெறுகிறது. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தேசிய சிறுதொழில் கழக அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு கண்காட்சி தொடங்குகிறது.

இதில், வேலை தேவைப்படுபவர்கள் மற்றும் புதிதாக டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். கண்காட்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து, கூடுதல் விவரங்களுக்கு 044-2225 2335, 73053 75041 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in