அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு: இஸ்ரேல் நாட்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு: இஸ்ரேல் நாட்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: இஸ்ரேல் நாட்டில் கட்டுமானப் பணியில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இஸ்ரேல் நாட்டில் கட்டுமானப் பணிக்கு 10,000 பேர் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு 3 வருடம் பணி அனுபவமுள்ள 25 முதல் 45 வயதுக்குட்பட்ட

ப்ளாஸ்டெரிங் பணி ( Plastering work), செராமிக் டைலிங் (Ceramic Tiling), கட்டிட ஃபார்ம் பணி (Building Form work) மற்றும் இரும்பு பென்டிங் (Iron Pending) ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

மாத ஊதியமாக சுமார் ரூ.1,37,000 வரை பெறலாம். மேலே குறிப்பிட்டுள்ள பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலை மார்ச் 5-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.tn.gov.in, தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in