விமானப் படையில் அக்னிவீர் வாயு திட்டத்தில் ஆட்சேர்ப்பு

விமானப் படையில் அக்னிவீர் வாயு திட்டத்தில் ஆட்சேர்ப்பு
Updated on
1 min read

இந்திய விமானப் படையில், அக்னிவீர் வாயு திட்டத்தின்கீழ், ஆட்சேர்ப்பு மார்ச் 17-ல் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு இணைய வழியில் பிப்.6 வரை விண்ணப்பிக்கலாம். 2004 ஜன.2-ம் தேதி முதல் 2007 ஜுலை 2-ம் தேதிக்கு இடையில் பிறந்த திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக், ஆட்டோமோட்டிவ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். https://agnipathvayu.cdac.in/ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். decgc.chennai@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in