அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு
Updated on
1 min read

சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை செய்ய முகவர்களை நியமனம் செய்வதற்கான நேர்முகத் தேர்வு வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு அண்ணாசாலை தலைமைஅஞ்சலகம், முதன்மை அஞ்சல் தலைவர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கல்வி தகுதி குறைந்தது 10-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 18-லிருந்து 50வயதுக்குள் இருக்க வேண்டும். சுய தொழில் செய்வோர், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள்,அங்கன்வாடி, சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

மேற்கண்ட தகுதியுடையவர்கள், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுச்சான்று, முகவரிச் சான்று, மற்றும் கல்வி சான்று ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சேர்க்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in