Published : 28 Nov 2023 11:10 AM
Last Updated : 28 Nov 2023 11:10 AM

20,000 பணியிடங்கள்: கோவையில் டிச.2-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா உள்ளிட்டோர்.

கோவை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டிசம்பர் 2-ம் தேதி கோவையில் நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 20 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில் கோவை நிர்மலா கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 2-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நேற்று மதுக்கரை, குனியமுத்தூர், போத்தனூர், வெள்ளலூர், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இன்று சிட்ரா, காளப்பட்டி, சரவணம்பட்டி, துடியலூர் ஆகிய இடங்களிலும், நாளை செல்வபுரம், பேரூர், தடாகம்ரோடு, கோவைப் புதூர், தொண்டா முத்தூர், சுண்டக்கா முத்தூர் ஆகிய இடங்களிலும் இளைஞர்கள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணார்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்காக 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

முகாமில் வேலை வாய்ப்பு பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் விவரங்களுக்கு 94990 55937 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x