பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் 2,582 ஆக உயர்வு

பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் 2,582 ஆக உயர்வு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி போட்டித் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வரும் 30-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயர்த்தி டிஆர்பி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சியில் 86 பணியிடங்கள், பள்ளிக்கல்வியில் 52, ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் 144, தொடக்கக் கல்வித் துறையில் 78 என மொத்தம் 360 பணியிடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in