குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம் - 2,113 பட்டதாரிகள் எழுதுகின்றனர்

குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம் - 2,113 பட்டதாரிகள் எழுதுகின்றனர்
Updated on
1 min read

சென்னை: குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த நவ. 19-ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.

அவர்களுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட்டது. இதில் வெற்றிபெற்றவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வு எழுத வேண்டும். அதன்படி குரூப் 1 முதன்மைத்தேர்வு இன்று (ஆக. 10) தொடங்கி ஆக. 13 வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் மட்டும் 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டாய தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு, விரிவாக எழுதுதல் உட்பட 4 தாள்களாக தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஹால் டிக்கெட் வெளியீடு: இதற்கிடையே நீதித் துறையில் உரிமையியல் (சிவில்) நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத தகுதி பெற்றவர்களுக்கான ஹால்டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை தேர்வர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in