கிண்டி - எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் மசாலா பொடிகள் தயாரிப்பு பயிற்சி

கிண்டி - எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் மசாலா பொடிகள் தயாரிப்பு பயிற்சி
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், உணவு மசாலா பொடிகள் தயாரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இதொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், உணவு மசாலா பொடிகள் தயாரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பு வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ.5 ஆயிரம்.

பிரியாணி மசாலா, சாட் மசாலா, சென்னா மசாலா, குருமா மசாலா, சில்லி சிக்கன் மசாலா, மீன் மசாலா, வாங்கி பாத் மிக்ஸ் மசாலா மற்றும் உடனடி குழம்பு மசாலா தயாரித்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

கல்வித் தகுதி 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 81227 17494, 82483 09134 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in