உலகின் தொழில்நுட்ப கோடீஸ்வரர் - தென் கொரியாவின் 22 வயது கிம் ஜுங்-யூன் சாதனை

உலகின் தொழில்நுட்ப கோடீஸ்வரர் - தென் கொரியாவின் 22 வயது கிம் ஜுங்-யூன் சாதனை
Updated on
1 min read

சியோல்: ஃபோர்ப்ஸ் இதழ் 2026-ம் ஆண்​டின் உலகக் கோடீஸ்​வரர்​கள் பட்​டியலை வெளி​யிட்​டுள்​ளது. இதில், ஆன்​லைன் கேமிங் ஜாம்​ப​வா​னான 'நெக்​சன்' நிறுவனத்தின் நிறு​வனர், மறைந்த கிம் ஜுங்​-ஜூ​வின் 22 வயது மகள் கிம் ஜுங்-யூன், தனது தந்​தை​யின் சொத்துரிமையை பெற்​றதன் மூலம் உலகின் மிக இளம் வயது தொழில்​நுட்ப கோடீஸ்​வரர் என்ற நிலையை எட்டியுள்​ளார்.

கிம் ஜுங்​-யூனின் மூத்த சகோ​தரி ஜுங்​-மின்​னும் வாரிசு அடிப்​படை​யில் தந்​தை​யின் சொத்​துகளை பெற்​றார். எனினும், இவர்​கள் இரு​வருமே நிறு​வனத்​தின் அன்​றாட நிர்வாக நடவடிக்​கை​களில் நேரடி​யாக ஈடு​படு​வ​தில்​லை. பொது​வெளி​யில் இவர்​களைப் பற்​றிய தகவல்​களும் மிகக் குறை​வாகவே உள்​ளன. தற்​போது ஜுங்​-யூன் தென்​கொரியா​வின் ஜேஜு தீவில் வசித்து வரு​வ​தாக ஃபோர்ப்ஸ் தரவு​கள் தெரிவிக்​கின்​றன.

நடப்பு ஆண்​டில் 30 வயதிற்​குட்​பட்ட கோடீஸ்​வரர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ள​தாக ஃபோர்ப்ஸ் தெரி​வித்​துள்​ளது. 30 வயதிற்கு உட்​பட்ட 35 கோடீஸ்​வரர்​களின் மொத்த சொத்து மதிப்பு 92.4 பில்​லியன் டாலர் ஆகும். இவர்​களில் பெரும்​பாலானோர் வாரிசு அடிப்​படை​யில் கோடீஸ்​வரர்​களாக இருந்​தா​லும், 12 பேர் சொந்த முயற்​சி​யால் உயர்ந்​துள்​ளனர்.

ஏஐ ஸ்டார்ட்​-அப் நிறு​வன​மான மெர்​கர் நிறு​வனத்​தின் 22 வயது நிறு​வனர்​கள் இதில் அடங்​கு​வர். எனினும், தொழில்​நுட்​பத் துறை​யில் இளம் வயது பெண் கோடீஸ்​வர​ராக ஜுங்​-யூன் தனித்து நிற்​கிறார். இவருடன் கல்ஷி நிறு​வனத்​தின் லுவானா லோப்ஸ் லாரா மற்​றும் ஸ்கேல் ஏஐ நிறு​வனத்​தின் லூசி குவோ ஆகியோ​ரும் 30 வயதிற்​குட்​பட்ட பெண் கோடீஸ்​வரர்​கள் பட்​டியலில் உள்ளனர்.

உலகின் தொழில்நுட்ப கோடீஸ்வரர் - தென் கொரியாவின் 22 வயது கிம் ஜுங்-யூன் சாதனை
விஜய் காரை மறித்து தர்ணாவில் ஈடுபட்ட தூத்துக்குடி அஜிதா ஆக்னல் திமுகவில் ஐக்கியம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in