ஹரியானாவில் நடந்த ஏலத்தில் விஐபி கார் பதிவு எண் ரூ.1.17 கோடிக்கு விற்பனை

ஹரியானாவில் நடந்த ஏலத்தில் விஐபி கார் பதிவு எண் ரூ.1.17 கோடிக்கு விற்பனை
Updated on
1 min read

புதுடெல்லி: ஹரி​யானா மாநிலத்​தில் புதிய வாக​னங்​களுக்கு விஐபி அல்​லது கவர்ச்​சிகர​மான பதிவெண்​ணைப் பெறுவதற்கான ஏலம் இணைய வழி​யில் (பரி​வாஹன் இணையதளம்) வாரந்​தோறும் நடை​பெறுகிறது.

கடந்த வாரம் நடை​பெற்ற ஏலத்​தின் முடிவு​கள் நேற்று வெளியானது. இதில், HR 88 B 8888 என்ற பதிவெண் ரூ.1.17 கோடிக்கு ஏலம் போனது. இது நாட்​டின் மிக​வும் விலை உயர்ந்த பதிவெண் என்ற சாதனை படைத்​துள்​ளது. முன்​ன​தாக, இந்த பதிவெண் வேண்டி அதிக அளவாக 45 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஏலத்​தின் அடிப்​படை விலை​யாக ரூ.50 ஆயிரம் நிர்​ண​யிக்கப்​பட்​டது. எனினும் கடும் போட்டி காரணமாக இறு​தி​யில் ரூ.1.17 கோடிக்கு விற்​பனை​யானது. எச்​ஆர் என்​பது ஹரி​யானா மாநிலத்தை​யும், 88 என்​பது குறிப்​பிட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கத்​தை​யும் பி என்​பது வாகன வரிசை எண் குறியீட்டையும் குறிக்​கிறது. அதன் பிறகு வரும் 8888 தனித்துவமான எண் ஆகும்.

இதில் சிறப்பு என்​னவென்​றால், முதலில் உள்ள எச், ஆர் தவிர மற்ற அனைத்​தும் 8 ஆக இருப்​பது​தான். நடு​வில் பி இருந்​தா​லும், அது ஆங்​கில கேப்​பிட்​டல் எழுத்​தில் உள்ள அது 8 போலவே தோன்றுகிறது.

இதற்கு முன்பு கடந்த ஏப்​ரல் மாதம் கேரளாவைச் சேர்ந்த கோடீஸ்​வரர் வேணு கோபால கிருஷ்ணன், தனது லம்போர்​கினி காருக்கு KL 07 DG 0007 (0007 ஜேம்​ஸ்​பாண்ட் குறியீடு) என்ற பதிவெண்ணை ரூ.45.99 லட்​சத்​துக்கு ஏலம் எடுத்திருந்​தார்.

ஹரியானாவில் நடந்த ஏலத்தில் விஐபி கார் பதிவு எண் ரூ.1.17 கோடிக்கு விற்பனை
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 44 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in