அமெரிக்காவில் ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: ட்ரம்ப் அறிவிப்பு
Updated on
2 min read

புதுடெல்லி: அமெரிக்காவில் ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ், தற்போது சர்வதேச அளவில் பல்வேறு தொழிற்சாலைகளை தொடங்க முடிவு செய்துள்ளது. தற்போது அமெரிக்காவில் 300 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.27 லட்சம் கோடி) செலவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்டுஉள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது இதுவே முதல் முறை. டெக்சாஸின் பிரவுன்ஸ்வில் துறைமுகம் பகுதியில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. இது அமெரிக்கச் சந்தைகளுக்கு எரிபொருளை வழங்குவதுடன், அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றுமதியும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

மேலும், இந்த சுத்திகரிப்பு ஆலை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் மிகத் தூய்மையான சுத்திகரிப்பு ஆலையாகச் செயல்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தத் திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்றும், அமெரிக்க எரிசக்தி உற்பத்திக்கு பெரிய ஊக்கம் அளிக்கும் திட்டம் என்றும் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக பிரவுன்ஸ்வில் துறைமுகம் பகுதியில் அமெரிக்காவின் முதல் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ‘அமெரிக்கா பர்ஸ்ட் ரிபைனிங்’ நிறுவனம் அமைக்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்.

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதலீட்டுடன் இந்த ஆலை உருவாக்கப்படும். இந்த முதலீடு அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரியது.

இந்த அசாத்தியமான முதலீட்டுக்காக இந்தியாவில் உள்ள பங்குதாரர்களுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இந்த முதலீடு தொடர்பாக இதுவரை ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை. இதன் உள்கட்டமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, ஏப்ரல் மாதம் பிரவுன்ஸ்வில் துறைமுகம் பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு அனுப்ப, இத்துறைமுகத்தின் ஆழ்கடல் வசதிகளை இந்த ஆலை பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் முக்கிய கடற்கரை நகரங்களில் ஒன்று பிரவுன்ஸ்வில். இங்குதான் முக்கியக் கப்பல் போக்குவரத்து மையமாக துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுக வளாகத்தையொட்டிதான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க அமெரிக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது.

உலகளவில் ஏற்றுமதி: இந்த ஆலை உலகளாவிய ஏற்றுமதிக்கு பேருதவியாக இருக்கும். இப்பகுதியின் நீண்ட கால கோரிக்கையான வேலைவாய்ப்பு பிரச்சினையைத் தீர்க்கும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த திட்டம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏராளமான தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது. மேலும், அப்பகுதிக்குக் குறிப்பிடத் தக்க பொருளாதார செயல் பாடுகளைக் கொண்டு வரும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரவுன்ஸ்வில் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கொண்டு வர அமெரிக்க அரசு சார்பில் பெரிய அளவில் முயற்சிகள் நடைபெற்றன. ஆனாலும், பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிபராக 2-வது முறை பதவியேற்ற ட்ரம்ப், ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்று அறிவித்தார். அதன்படி அமெரிக்காவில் தொழில் தொடங்க பல நாடுகளுக்கு அழைப்பு விடுத் தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in