மத்திய பட்ஜெட்டில் செமி கண்டக்டர் துறை வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி

மத்திய பட்ஜெட்டில் செமி கண்டக்டர் துறை வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி
Updated on
1 min read

செமி கண்​டக்​டர் துறை வளர்ச்​சிக்​காக மத்​திய பட்​ஜெட்​டில் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

மத்​திய பட்​ஜெட்​டில் இதுகுறித்து கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வில் செமி கண்​டக்​டர் உற்​பத்​தியை அதி​கரிக்க தேவை​யான நடவடிக்​கைகளை மத்​திய அரசு எடுத்து வரு​கிறது. இதற்​காகவே புதி​தாக செமிகண்​டக்​டர் இயக்​கம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. கருவி​கள் மற்​றும் கச்சா பொருள்​கள் மற்​றும் இந்​திய அறி​வு​சார் சொத்​துகளை உற்​பத்தி செய்​வதற்​காக ஐஎஸ்​எம் 1.0 (இந்​தியா செமி கண்​டக்​டர் மிஷன்), ஐஎஸ்​எம் 2.0 அடிப்​படையி​லான கட்​டமைப்​பு​கள் தொடங்​கப்​படும். செமிகண்​டக்​டர் 2.0 இயக்​கத் திட்ட வளர்ச்​சிக்கு இந்த ஆண்​டில் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இது கடந்த ஆண்​டைக் காட்​டிலும் 2 மடங்கு அதி​க​மாகும்.

செமி கண்​டக்​டர் துறை​யில் தற்​போது 46 திட்​டங்​களுக்கு அனு​மதி தரப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் ரூ.54,567 கோடி முதலீடு செய்​யப்​படும். இந்த நிறு​வனங்​கள் தொடங்​கப்​பட்டு முழு உற்​பத்​தியை எட்​டும்​போது ரூ.3,67,669 கோடி மதிப்​பிலான பொருட்​களின் உற்​பத்தி இருக்​கும். இந்​தத் துறை மூலம் நேரடி​யாக 50 ஆயிரம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

இந்​தத் திட்​டம் மூலம் 2030-31-ம் ஆண்​டுக்​குள் 500 பில்​லியன் அமெரிக்க டாலர் மதிப்​பிலான மின்​னணு உற்​பத்தி சுற்​றுச்​சூழல் அமைப்​புக்கு அடித்​தளம் அமைக்​கப்படும். மேலும், இந்​தி​யா​வின் தொழில்​நுட்ப இறை​யாண்​மைக்​கும் உலகளா​விய நம்​பிக்​கைக்​கும் இது வலு சேர்க்​கும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மத்திய பட்ஜெட்டில் செமி கண்டக்டர் துறை வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி
2030-31-ல் ஜிடிபி கடன் விகிதம் 50% குறையும்: மத்திய பட்ஜெட்டில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in