இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தகவல்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் ஊடக நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தை ஒரே நாளில் இறுதி செய்ய முடியாது. இது மக்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது ஆகும். இதனால் நீண்ட கால தாமதம் ஏற்பட்டது.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு எட்டப்பட்டு உள்ளது. தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளோம். வெகு விரைவில் இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும்.

இந்தியா - சீனா உறவு

கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியா, சீனா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்போது எல்லையில் இயல்பு நிலை நீடிக்கிறது. அதேநேரம் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

ராணுவத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 1980-ம் ஆண்டுகளில் இந்தியா, சீனாவின் பொருளாதாரம் சமநிலையில் இருந்தது. அதன்பிறகு சீனாவின் தொழில் துறை நவீனப்படுத்தப்பட்டது. அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. கடந்த 1980-களில் நாம் வாய்ப்பை தவறவிட்டு விட்டோம்.

தற்போது சீன பொருளாதாரத்துடன் போட்டி போடும் அளவுக்கு இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த கால இழப்புகளை ஈடுகட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்&nbsp;எஸ்.ஜெய்சங்கர்</p></div>
மதுபான ஒப்பந்த மோதல் முதல் பழிக்குப்பழி கொலை வரை: ராஜஸ்தானில் புதிய கேங்ஸ்டர் கலாச்சாரம்

X