நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் - நந்தனத்தில் நாளை தொடக்கம்

நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் - நந்தனத்தில் நாளை தொடக்கம்
Updated on
1 min read

ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிஐஐசி), மாநில அரசின் ஆதரவுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளில் புதிய தொழிற் சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவிகளை வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நந்தனத்தில் உள்ள சென்னை கிளை அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாமை நாளை (ஜூன் 1) முதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாம் ஜூன் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் டிஐஐசி திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் போன்றவை குறித்த விளக்கங்கள் விரிவாக தரப்படும். தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியமாக ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும். கடந்த ஆண்டை போலவே, கடன் விண் ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு 044 - 3501 1489, 94443 96888, 94443 96806, 94443 96822 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழில திபர்கள் பயன்படுத்தி தொழில் திட் டங்களுடன் வந்து தொழில் கடன், மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் - நந்தனத்தில் நாளை தொடக்கம்
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in