படம்: மெட்டா ஏஐ

படம்: மெட்டா ஏஐ

குறைந்தது தங்கம் விலை - ஒரு பவுன் ரூ.92,160-க்கு விற்பனை

Published on

சென்னை: ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும் ஆபரண தங்கத்தின் விலை இன்று (நவ.,24) பவுனுக்கு ரூ. 880 குறைந்து, ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு என சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​வது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்​.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்​டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது.

இந்நிலையில் இன்று (நவ.,24) மீண்டும் பவுனுக்கு ரூ. 880 குறைந்து, ரூ.92,160 விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, கிராமுக்கு ரூ.110 குறைந்து, ரூ.11,520-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து, ரூ. 171-க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ ரூ. 1,71,000-க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>படம்: மெட்டா ஏஐ</p></div>
புதிய தொழிலாளர் சட்டம் மிகப் பெரிய சீர்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in