50 சதவீத வரி விதிப்பு குறித்து மெக்ஸிகோவுடன் இந்தியா பேச்சுவார்த்தை

50 சதவீத வரி விதிப்பு குறித்து மெக்ஸிகோவுடன் இந்தியா பேச்சுவார்த்தை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய பொருட்​களுக்கு மெக்​ஸிகோ அரசு 50% வரி விதித்​திருப்​பது குறித்து அந்த நாட்டு அரசுடன் மத்​திய அரசு பேச்சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

இந்​தி​யா, சீனா, தென்​கொரி​யா, தாய்​லாந்​து, இந்​தோ​னேசியா ஆகிய நாடு​களில் இருந்து மெக்​ஸிகோ அதிக அளவில் பொருட்களை இறக்​குமதி செய்து வரு​கிறது. குறிப்​பாக இந்த நாடுகளில் இருந்து கார்​கள், பைக்​கு​கள், மோட்​டார் உதிரி பாகங்கள், மின்​னணு பொருட்​கள், ரசாயனங்​கள், ஜவுளி, உருக்​கு, பிளாஸ்​டிக், காலணி​கள் உள்ளிட்ட பல பொருட்களை மெக்ஸிகோ அதிக அளவில் இறக்​குமதி செய்​கிறது. இந்த பொருட்கள் மெக்​ஸிகோ​வில் இருந்து அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்கு அமெரிக்க அரசு பகிரங்​க​மாக எதிர்ப்பு தெரி​வித்​தது. அமெரிக்​கா, மெக்​ஸிகோ, கனடா ஆகிய நாடு​கள் இடையே யுஎஸ்​எம்​சிஏ என்ற வர்த்தக ஒப்​பந்​தம் அமலில் உள்​ளது. இதன்​படி மெக்ஸிகோ​வில் இருந்து அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்யப்படும் பொருட்​களில் சுமார் 85% பொருட்​களுக்கு வரி​விலக்கு உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை​யில் இந்த ஒப்​பந்​தம் மறுபரிசீலனை செய்​யப்பட உள்​ளது. அப்​போது. மெக்​ஸிகோ உடனான ஒப்​பந்​தத்தை ரத்து செய்​வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​தார்.

இந்த சூழலில் இந்​தி​யா, சீனா, தென்​கொரி​யா, தாய்​லாந்​து, இந்தோ​னேசியா ஆகிய 5 நாடு​களின் பொருட்​களுக்கு மெக்ஸிகோ அரசு சில நாட்​களுக்கு முன்பு 50% வரை வரி விதித்தது. புதிய வரி விதிப்பு வரும் ஜனவரி 1ம் தேதி​யில் இருந்து அமலுக்கு வர இருக்​கிறது. இந்​தியா அதிக அளவில் வர்த்​தகம் செய்​யும் 10 நாடு​களில் ஒன்​றாக மெக்​ஸிகோ விளங்​கு​கிறது. இருநாடு​கள் இடையி​லான வர்த்​தகம் கடந்த 2024ம் ஆண்​டில் 11.7 பில்​லியன் டாலரை எட்​டியது.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறும்போது, "அமெரிக்கா​வின் அழுத்​தம் காரண​மாக இந்​தியா உள்​ளிட்ட நாடுகளின் பொருட்​கள் மீது மெக்​ஸிகோ அரசு 50% வரியை விதித்திருக்​கிறது. இது தொடர்பாக, மத்​திய வர்த்தக துறை செயலா​ளர் ராஜேஷ் அகர்​வால், மெக்​ஸிகோ பொருளா​தார துறை இணை அமைச்​சர் லூயிஸ் ரோசன்​ டோவுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். இந்திய ஏற்​றும​தி​யாளர்​களின் நலன்​களை பாது​காக்க தேவை​யான நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்" என்று தெரி​வித்​தன.

இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் கூறும்போது, "தற்​போதைய சூழலில் மெக்​ஸிகோ அரசு இந்​திய கார்​களுக்கு 20%, ஜவுளிக்கு 15%, மருந்து பொருட்​களுக்கு 5% வரி விதித்து வரு​கிறது. ஸ்மார்ட் போன்​களுக்கு வரி விலக்கு அளிக்​கப்​பட்​டு இருக்​கிறது. இந்​த பொருட்​கள்​ மீது 50%​ வரை வரி வி​திக்​கப்​பட்​​டால்​ மெக்ஸிகோவுக்கான ஏற்​றுமதி மிகக்​ கடுமை​யாகப்​ ​பாதிக்கப்படும்​" என்றனர்.

50 சதவீத வரி விதிப்பு குறித்து மெக்ஸிகோவுடன் இந்தியா பேச்சுவார்த்தை
பனையூர் பார்ட்டியில் உள்ளடி அரசியல் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in