பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு வரி விலக்கு

பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு வரி விலக்கு
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு ஆசி​யா​வில் நிலவி வரும் போர்ச் சூழல் காரண​மாக, முக்​கிய பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்​கான இறக்​குமதி வரியை ஜூன் 30-ம் தேதி வரை மூன்று மாதங்​களுக்கு ரத்து செய்து மத்​திய அரசு நேற்று உத்​தர​விட்​டது. விநி​யோகச் சங்​கி​லி​யில் ஏற்பட்டுள்ள பாதிப்​பு​களைச் சீர் செய்​ய​வும், உள்​நாட்டு உற்​பத்​தி​யாளர்​களுக்​குப் நிவாரணம் அளிக்​க​வும் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உள்​நாட்​டுத் தொழிற்​சாலைகளுக்​குத் தேவையான மூலப்​பொருட்​கள் தங்​குதடை​யின்றி கிடைப்பதை இது உறுதி செய்​யும். பிளாஸ்​டிக், பேக்​கேஜிங், ஜவுளி, மருந்​துப் பொருட்​கள், ரசாயனம் மற்​றும் வாகன உதிரி​பாகங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு உற்​பத்​தித் துறை​கள் இந்த வரி விலக்​கி​னால் பெரும் பயனடை​யும். இந்​தத் தற்​காலிக வரி விலக்கு காரண​மாக அரசு கருவூலத்துக்கு சுமார் ரூ.1,800 கோடி வரு​வாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு வரி விலக்கு
“பாசிசம் என்று சொன்ன பாஜக இப்போது பாயாசம் ஆகிவிட்டதா?” - விஜய்க்கு சீமான் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in