

கோப்புப் படம்
சென்னை: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளி ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29 சதவீத வளர்ச்சி. குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடம்.
கடந்த 2020-21-ம் ஆண்டில் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழகத்தின் ஏற்றுமதி அளவு, திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளால், அடுத்த 4 ஆண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகம் மட்டுமே 21.84 சதவீதம். இவை அனைத்தையும் சொல்வது நாம் அல்ல, மத்திய அரசு” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.