இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எதிரொலியாக பங்குச் சந்தையில் எழுச்சி: ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்

வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4,200 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம்
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எதிரொலியாக பங்குச் சந்தையில் எழுச்சி: ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்
Updated on
2 min read

மும்பை: இந்தியா மீதான அமெரிக்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தை நேற்று எழுச்சியடைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4,200 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 1-ம் தேதி மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதையடுத்து வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தாலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பங்குச் சந்தை வேலை செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) உயர்த்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதையடுத்து இந்திய பங்குச் சந்தைகள் மளமளவென வீழ்ச்சி அடைந்தன. சென்செக்ஸ் 1,546.84 புள்ளிகள் (1.88%) சரிந்து 80,722.94 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 495.20 புள்ளிகள் (1.96%) வீழ்ச்சியடைந்து 24,825.45 புள்ளிகளில் நிலை கொண்டது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு அன்றைய தினம் மட்டும் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தியா மீதான வர்த்தக வரியை 18 சதவீதமாக குறைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் திடீரென அறிவித்தார். இது பங்குச் சந்தையில் நேற்று எதிரொலித்தது. பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று காலை தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 4,205 புள்ளிகளுக்கு மேல் (5%) உயர்ந்து 85,872 புள்ளிகளை எட்டியது. பின்னர் சற்று குறைந்து வர்த்தகமானது. இறுதியில், 2,073 புள்ளிகள் உயர்ந்து 83,739-ல் நிலை பெற்றது. இதுபோல நிப்டி 1,250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. வர்த்தக இறுதியில் 639 புள்ளிகள் உயர்ந்து 25,727-ல் நிறைவடைந்தது. இது 2.55 சதவீத உயர்வு ஆகும்.

நேற்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான பங்குகள் உயர்வுடன் முடிந்தன. இதுபோல நடுத்தர மற்றும் சிறு நிறுவன குறியீடுகள் உயர்வுடன் முடிந்தன. ஜவுளி, தோல், ஜெம் அன்ட் ஜுவல்லரி, கடல் உணவு ஏற்றுமதி, சிறப்பு ரசாயனம் தொடர்பான நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.

நிப்டி-50-ல் இடம்பெற்றுள்ளவற்றில் அதிகபட்சமாக அதானி என்டர்பிரைசஸ் பங்கு 10.5% உயர்ந்தது. அதானி போர்ட்ஸ் 9.1%, பஜாஜ் பைனான்ஸ் 6.6%, இண்டிகோ 5.57% உயர்ந்தது. டெக் மஹிந்திரா, பாரத் எலெக்ட்ரானிஸ் பங்குகள் மட்டும் சிறிய சரிவுடன் முடிந்தன. பங்குச் சந்தை உயர்வு காரணமாக ஒரே நாளில் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் கோடி அதிகரித்தது.

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வலுவடைந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பு ஆகிய காரணங்களால் இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று அதிக உயர்வைச் சந்தித்தன. இதன்மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை மீண்டும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங், ஐரோப்பா, அமெரிக்க பங்குச் சந்தைகளும் நேற்று ஏற்றத்துடன் முடிந்தன.

பிரதமர் மோடிக்கு என்டிஏ தலைவர்கள் பாராட்டு: தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) கட்​சிகளின் நாடாளு​மன்ற குழுக் கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்​தக் கூட்​டத்​துக்​குப் பின்​னர் நாடாளு​மன்ற விவ​காரத்துறை அமைச்​சர் கிரண் ரிஜுஜு கூறிய​தாவது:

மக்​களவை, மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் நாடாளு​மன்​றத்​தி​லும் மக்​களிடத்​தி​லும் எப்​படி செயல்பட வேண்​டும் என்​பது குறித்து பிரதமர் விரி​வாக ஆலோ​சனை வழங்​கி​னார். ஒவ்​வொரு தேர்​தலிலும் என்​டிஏ தலை​வர்​கள், எம்​.பி.க்​கள் சிறப்​பாக பணி​யாற்​று​வ​தால்​தான் வெற்றி கிடைக்​கிறது. களத்​தில் மக்​களோடு இணைந்து தொடர்ந்து பணி​யாற்றுமாறு பிரதமர் வலி​யுறுத்​தி​னார்.

மக்​களு​டன் தொடர்​புள்ள, நட்பு ரீதியி​லான கொள்​கைகள் மற்​றும் கடின உழைப்​பால் என்​டிஏ கூட்​டணி தொடர்ந்து வெற்றி பெற்று வரு​கிறது. உள்​ளாட்​சித் தேர்​தலில் இருந்து சட்​டப்​பேர​வைத் தேர்​தல், நாடாளு​மன்றத் தேர்​தலில் என்​டிஏ வெற்றி பெற்​ற​தால் என்​டிஏ தலை​வர்​கள் திருப்தி அடையக் கூடாது. மக்​களுக்கு தொடர்ந்து நல்ல பணி​களை செய்ய வேண்​டும் என்று பிரதமர் மோடி கேட்​டுக் கொண்​டார்.

பிரதமர் மோடி தலை​மையி​லான அரசு இது​வரை 39 நாடு​களு​டன் வர்த்தக ஒப்​பந்​தத்தை மேற்​கொண்​டுள்​ளது. அத்​தனை நாடு​களும் வளர்ந்த நாடு​கள். இது வரலாற்​றுச் சிறப்​புமிக்க சாதனை. அதற்​காக அவருக்கு என்​டிஏ கூட்​டத்​தில் பாராட்டு தெரிவிக்​கப்​பட்​டது. குறிப்​பாக இந்​தியா மீதான வர்த்தக வரியை 50 சதவீதத்​தில் இருந்து 18 சதவீத​மாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறைத்​துள்​ளார். இதற்​கான அனைத்து பாராட்​டும் பிரதமர் மோடியைச் சேரும். இவ்​வாறு கிரண் ரிஜுஜு கூறி​னார்.

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எதிரொலியாக பங்குச் சந்தையில் எழுச்சி: ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்
எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்திய டெல்லி: இறுதிக்கு முன்னேறி அசத்தல் - WPL 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in