

புதுடெல்லி: மார்ச் 1 முதல் யுடிஎஸ் (UTS) மொபைல் செயலி நிறுத்தப்படுவதால் ரயில்ஒன் (RailOne) செயலிக்கு மாறுமாறு பயணிகளுக்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது: "யுடிஎஸ் மொபைல் செயலியை மார்ச் 1 முதல் பயன்படுத்த முடியாது. இதற்கு பதிலாக ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த பயணிகள் அறிவுறுத்தப் படுகின்றனர். யுடிஎஸ் செயலி பயனர்களின் தற்போதைய ஆர்-வாலட் இருப்பு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். அது காலாவதியாகாது. அந்த இருப்பு ரயில் ஒன் செயலியில் பயன்படுத்த கிடைக்கும்.
முன்பதிவு டிக்கெட், முன்பதிவு அல்லாத டிக்கெட், சீசன் மற்றும் நடைமேடை டிக்கெட் சேவைகளை ரயில்ஒன் செயலி வழங்கும். இந்த செயலி மூலம் பிஎன்ஆர் நிலவரம் அறியலாம். முன்பதிவு ரத்து செய்யலாம். ரீபண்ட் நிலவரம் உட்பட அனைத்து விவரங்களையும் அறியலாம். இவ்வாறு தெற்கு ரயில்வே கூறியுள்ளது.