தெற்கு ரயில்வேக்கு ரூ.12,110 கோடி வருவாய்

தெற்கு ரயில்வேக்கு ரூ.12,110 கோடி வருவாய்
Updated on
1 min read

சென்னை: தெற்கு ரயில்​வேக்கு கடந்த 2025-26-ம் நிதி​யாண்​டில், பயணி​கள் பிரி​வில் ரூ.8,269.09 கோடி, சரக்கு பிரி​வில் ரூ.3,841.11 கோடி என மொத்​தம் ரூ.12,110 வரு​வாய் ஈட்​டி​யுள்​ளது.

இதுகுறித்​து, தெற்கு ரயில்வே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ரயில்வே கடந்த நிதி​யாண்​டில் (2025-26) அனைத்து துறை​களி​லும் சிறப்​பான செயல்​பாடு​களு​டன் பணி​யாற்​றி​யுள்​ளது. பயணி​கள் ரயில்​கள் இயக்​கம் பிரி​வில் ரூ.8,269.09 கோடி வரு​வாய் ஈட்​டி​யுள்​ளது.

இது, முந்​தைய ஆண்​டைய ஒப்​பிடு​கை​யில் 9.7 சதவீதம் அதி​க​மாகும். ரயில்வே வாரி​யம் நிர்​ண​யித்த ஆண்டு இலக்​கான ரூ.8,119.32 கோடியை​விட 1.8 சதவீதம் அதி​க​மாகும்.

மேலும் தெற்கு ரயில்​வே​யில் இது​வரை இல்​லாத அளவுக்கு டிக்​கெட் பரிசோதனை வாயி​லாக ரூ.160.75 கோடி ஈட்​டப்பட்டுள்​ளது. இது முந்​தைய ஆண்​டில் ரூ.129.82 கோடி​யாக இருந்​தது. இதன்படி இது 30.93 சதவீதம் அதி​க​மாகும். அதேபோல் சரக்கு ரயில் போக்​கு​வரத்து பிரி​வில் ரூ.3,841 கோடி வருவாய் ஈட்​டி​யுள்​ளது. இதற்கு முந்​தைய ஆண்டை ஒப்​பிடு​கை​யில் இது 0.9 சதவீதம் வளர்ச்​சி​யாகும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தெற்கு ரயில்வேக்கு ரூ.12,110 கோடி வருவாய்
“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” - திருமாவளவன் திடீர் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in