

சென்னை: சென்னையில் இன்று ஆபணரத் தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லை. அதேவேளையில், வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ரூ.2,75,00-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நிலை போன்றவற்றால், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி, ஒரு பவுன் ரூ.1,14,400 ஆகவும் ஒரு கிராம் தங்கம் ரூ.14,300 ஆகவும் இருந்தது. 24 காரட் தங்கம் ரூ.1,24,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.275 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ரூ.2,75,000 ஆகவும் இருந்தது.