டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - காரணம் என்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - காரணம் என்ன?
Updated on
1 min read

புது டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 96-ஐ கடந்து வீழ்ச்சியடைந்தது.

ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களாகவே கடுமையான அழுத்தத்தில் உள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 107 அமெரிக்க டாலர் அளவில் உள்ளது. இதனால் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பதோடு, நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கு அதிகமானவற்றை இறக்குமதி செய்வதால், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வானது இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அமெரிக்க டாலரில் வாங்கப்படுவதால், ரூபாயின் மதிப்பு பலவீனமடையும் போது இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கிறது. இது பணவீக்கம், எரிபொருள் கட்டணங்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது.

இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 0.3 சதவீதம் சரிந்து 96.05 ஆக இன்று குறைந்தது. இது இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும். பின்னர், இரவு நிலவரப்படி ரூபாய் மதிப்பு 95.96 ஆக இருந்தது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - காரணம் என்ன?
தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் கட்டாயம்! - வெளியான உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in