வெளியேறும் அந்நிய முதலீடுகள் | வரலாற்றுச் சரிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு

வெளியேறும் அந்நிய முதலீடுகள் | வரலாற்றுச் சரிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.20 என்ற வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றமே இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச அளவிலான பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டுச் சவால்கள் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நிலையற்றதாக மாறி வருகிறது. கடந்த ஐந்து வர்த்தக அமர்வுகளில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாயின் மதிப்பு 95.84 முதல் 96.14 வரை ஊசலாடிய நிலையில் வர்த்தக முடிவில் 95.97 என்பதாக நிலைபெற்றது. இதுவும் ஒரு வரலாற்றுச்சரிவாகவே அமைந்தது.

இந்நிலையில் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு 96.20 என்ற மற்றுமொரு வரலாற்றுச் சரிவைக் கண்டது. ரூபாயின் மதிப்பு இன்று 95.85 முதல் 96.30 வரை ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

ரூபாய் மதிப்பின் சரிவு 96.30 முதல் 96.40க்குள் இருக்கும்படி தாக்குப்பிடிப்பதற்கான உடனடி தடை நிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புக்கு மேல் ரூபாயின் மதிப்பு சரிந்தால் அது 96.50 என்ற நிலையை நோக்கி தள்ளக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சரிவுக்குக் காரணம் என்ன?

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றமே ரூபாய் சரிவுக்கு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. தற்போதைய மே மாதத்தில் இதுவரை இந்திய பங்குச் சந்தையில் இருந்து சுமார் ரூ.27,000 கோடி வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் வெளியேறி உள்ளன. இந்த ஆண்டில் இதுவரை ரூ.2.2 லட்சம் கோடி வெளியேறி உள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் வெளியேறிய வெளிநாட்டு நிறுவன முதலீடு ரூ.1.66 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் இதற்குள்ளாகவே அதை மிஞ்சிவிட்டது.

கச்சா எண்ணெய் விலையின் அதிரடி உயர்வு ரூபாய் சரிவுக்கு முக்கிய காரணியாக உள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 111 டாலரை தாண்டிவிட்டது. இதனால், இந்தியாவின் இறக்குமதிச் செலவு அதிகரித்து, பணவீக்கம் குறித்த அச்சங்களைத் தூண்டுகிறது.

வெளியேறும் அந்நிய முதலீடுகள் | வரலாற்றுச் சரிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு
“தவெக ஆட்சியின் முகம் போகப் போக தெரியும்” - தஞ்சையில் உதயநிதி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in