

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: இந்தியாவை சிக்கலான உயிரி மருந்துகளின் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், ‘பயோபார்மா சக்தி மிஷன்' தொடங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்துக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும். இந்தியாவில் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இவற்றுக்கான உயிரி மருந்துகள், பயோசிமிலர் மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம், மக்கள் மலிவான விலையில் தரமான சிகிச்சை பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ், மருந்துத் துறையில் நிபுணத்து வத்தை மேம்படுத்த 3 புதிய தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் நிறுவப்படும்.
மேலும், தற்போதுள்ள 7 நிறுவனங்கள் சர்வதேச தரத்துக்கு தரம் உயர்த்தப்படும். புதிய மருந்துகளை சந்தைக்குக் கொண்டு வரும் முன் அவற்றைச் சோதிக்க, நாடு முழுவதும் 1,000 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை மையங்கள் நிறுவப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.