‘ரூப் டாப்’ சூரிய ஒளி மின் உற்பத்திக்கு தமிழகத்தில் மட்டும் ‘நெட்வொர்க் கட்டணம்’ வசூலிப்பதால் பாதிப்பு

‘ரூப் டாப்’ சூரிய ஒளி மின் உற்பத்திக்கு தமிழகத்தில் மட்டும் ‘நெட்வொர்க் கட்டணம்’ வசூலிப்பதால் பாதிப்பு
Updated on
1 min read

கோவை: இந்​தி​யா​வில் எந்த மாநிலத்​தி​லும் இல்​லாத வகை​யில், ‘ரூப் டாப்’ சூரிய ஒளி மின் உற்​பத்​திக்கு தமிழகத்​தில் மட்​டும் ‘நெட்​வொர்க்’ கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​வ​தால், பிற மாநிலங்​களு​டன் போட்​டி​யிட முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ள​தாக தொழில் துறை​யினர் கவலை தெரி​வித்​துள்​ளனர். அதி​கரித்​து​வரும் மின்​சார தேவையை பூர்த்தி செய்ய சூரிய ஒளி, காற்​றாலை போன்ற புதுப்​பிக்​கத்​தக்க மின் உற்​பத்தி திட்​டங்​கள் உதவு​கின்​றன.

தமிழகத்​தில் காற்​றாலைகள் பிரி​வில் 12,000 மெகா​வாட், சூரிய ஒளி பிரி​வில் 10,153 மெகா​வாட் மின்​சா​ரம் உற்​பத்தி செய்​வதற்​கான கட்​டமைப்பு வசதி​கள் உள்​ளன. சூரிய ஒளி மின் உற்​பத்​தி​யில் தரை​யில் அமைப்​ப​தற்கு மாற்​றாக, கட்​டிட மேற்​கூரை​யில் பேனல்​கள் அமைக்​கப்​பட்டு மின் உற்​பத்தி செய்​யப்​படும் ‘ரூப் டாப்’ சூரிய ஒளி மின் உ ற்பத்தி திட்​டத்​துக்கு தொழில் துறை​யினர், வணி​கர்​கள் மத்​தி​யில் அதிக வரவேற்பு உள்​ளது.

ஆனால், தமிழகத்​தில் மட்​டும் இந்த திட்​டத்​துக்கு ‘நெட்​வொர்க்’ கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​வ​தாக​வும், இதனால் பிற மாநிலங்​களு​டன் போட்​டி​யிட முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ள​தாக​வும் தொழில் துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து இந்​திய தொழில் வர்த்தக சபை கவுர​வச் செய​லா​ளர் பிரதீப் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சூரிய ஒளி மின் உற்​பத்​தி​யில் மொத்​த​முள்ள 10,153 மெகா​வாட் மின் உற்​பத்​திக் கட்​டமைப்​பில், 7,000 மெகா​வாட் தரை​யில் அமைக்​கப்​படும் சூரிய ஒளி மின்​உற்​பத்​திக்​கான கட்​டமைப்​பு, 3,000 மெகா​வாட் ‘ரூப் டாப்’ மின்​உற்​பத்​தி்க்​கான கட்​டமைப்பு உள்​ளது.

தங்​களின் இடத்​தில் உள்ள கட்​டிடத்​தின் மேற்​கூரை​யில் (ரூப் டாப்) தாங்​களாகவே முதலீடு செய்து பேனல்​கள் அமைத்து சூரிய ஒளி மூலம் மின் உற்​பத்தி செய்​பவர்​களுக்கு இந்​தி​யா​வில் எந்த மாநிலத்​தி​லும் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​வ​தில்​லை. ஆனால், தமிழகத்​தில் மட்​டும் இதற்கு ‘நெட்​வொர்க்’ கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

மேலும், மின் கட்​ட​ணம், நிலைக் கட்​ட​ணம் ஆகிய​வற்​றை​யும் தமிழக அரசு உயர்த்​தி​யுள்​ள​தால், உள்​நாட்டு சந்​தை​யில் தமிழகத்​தைச் சேர்ந்த தொழில் துறை​யினர், மற்ற மாநிலங்​களு​டன் போட்​டி​யிட முடி​யாத நிலை தொடர்​கிறது.

எனவே, உயர்த்​தப்​பட்ட மின் கட்​ட​ணத்​தைக் குறைக்​க​வும், ‘நெட்​வொர்க்’ கட்​ட​ணம் வசூலிக்​கும் முறையை திரும்​பப் பெற​வும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்​து, தொழில் வளர்ச்​சிக்கு உதவ வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in