பிரத்யேக வடிவமைப்புகளை மேற்கொள்ளும் வசதியுடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனையகம் திறப்பு

பிரத்யேக வடிவமைப்புகளை மேற்கொள்ளும் வசதியுடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனையகம் திறப்பு
Updated on: 
1 min read

சென்னை: வாடிக்​கை​யாளர்​களின் விருப்​பத்​துக்கு ஏற்ப பிரத்​யேக​மாக வாக​னங்​களை வடிவ​மைக்​கும் உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறு​வனம் தனது புதிய விற்​பனையகத்தை சென்னை மீனம்​பாக்​கத்​தில் நேற்று திறந்​துள்​ளது.

இதனை ரோல்ஸ் ராய்ஸ் நிறு​வனத்​தின் பிராண்ட் மற்​றும் விற்​பனைப் பிரிவு இயக்​குநர் ஜூலியன் ஜென்​கின்ஸ் திறந்து வைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: ரோல்ஸ் ராய்ஸ் நிறு​வனம் ‘சூப்​பர் லக்​சரி’ பிரி​வில் உலக அளவில் தனக்​கென ஒரு பிரத்​யேக இடத்தை கடந்த 122 ஆண்​டு​களாக தக்​க​வைத்​துள்​ளது.

வாடிக்​கை​யாளர்​கள் தங்​களுக்கு பிடித்​த​மான வண்​ணம், உட்​புற அலங்​காரம் மற்​றும் தனிப்​பட்ட அம்​சங்​களைத் தேர்ந்​தெடுத்து கார்​களை வடிவ​மைத்து கொள்​ளும் வகை​யில் ‘பிஸ்​போக் கமிஷனிங் அட்​லியர்’ என்ற தனிப் பகு​தி​யுடன் இந்த புதிய வளாகம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​காக ரோல்ஸ் ராய்ஸ் நிறு​வனம் 44,000 வண்ண தேர்​வு​களை​யும் வழங்​கு​கிறது. 2024-ம் ஆண்டு அறி​முகப்​படுத்​தப்​பட்ட ரோல்ஸ் ராய்​ஸின் ‘ஸ்​பெக்​டர்’ எலெக்ட்​ரிக் கார் அமோக வரவேற்பை பெற்​று, நிறு​வனத்​தின் அதி​கம் விற்​பனை​யாகும் இரண்​டாவது மாடலாக உரு​வெடுத்​துள்​ளது.

இதைத்​தொடர்ந்து நிறு​வனத்​தின் புதிய மாடலான ‘கோஸ்ட் சீரிஸ் 2’ வரும் நவம்​பர் மாதம் இந்​தி​யா​வில் அறி​முக​மாக உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்த நிகழ்​வில் ரோல்ஸ் ராய்ஸ் மோட்​டார் கார்ஸ் சென்னை முதன்மை டீலர் வசந்தி பூப​தி, மண்டல பொது மேலா​ளர் (ஆசி​ய-பசிபிக்) கென்னி அவுலி​யா, கே.​யு.என் குழு​மத்​தின்​ தலை​வர்​ வெங்​கடேஷ் உள்​ளிட்​டோர்​ உடன்​ இருந்​தனர்.

பிரத்யேக வடிவமைப்புகளை மேற்கொள்ளும் வசதியுடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய விற்பனையகம் திறப்பு
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ: ரூ.30,213 கோடி திரட்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இலக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in