ரூ.3,600 கோடி உரிமை கோரப்படாத தொகை: ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ராஜ்குமார் தகவல்

வேலூரில் உரிமை கோரப்படாத வங்கி இருப்பு மற்றும் வைப்புத் தொகைகளை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரியவர்களிடம் ஒப்படைத்தார் ஆர்பிஐ சென்னை மண்டல பொது மேலாளர் ராஜ்குமார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்

வேலூரில் உரிமை கோரப்படாத வங்கி இருப்பு மற்றும் வைப்புத் தொகைகளை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரியவர்களிடம் ஒப்படைத்தார் ஆர்பிஐ சென்னை மண்டல பொது மேலாளர் ராஜ்குமார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்

Updated on
1 min read

வேலூர்: தமிழகத்​தில் 1.33 கோடி கணக்​கு​களில் ரூ.3,600 கோடி தொகை ரிசர்வ் வங்கி வசம் உரிமை கோரப்​ப​டா​மல் உள்ளதாக ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ராஜ்கு​மார் கூறி​னார்.

வேலூர் மாவட்​டத்​தில் நீண்​ட​கால​மாக உரிமை கோரப்​ப​டாத வங்​கிக் கணக்​கு​களில் உள்ள இருப்​புத் தொகை, வைப்​புத் தொகை, காப்​பீட்​டுத் தொகை, பங்​குத் தொகை உள்​ளிட்​ட​வற்றை உரிய​வர்​களிடம் ஒப்​படைக்​கும் சிறப்பு முகாம் நேற்று நடை​பெற்​றது.

ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நடை​பெற்ற முகா​முக்​கு, மாவட்ட வரு​வாய் அலு​வலர் சிவசுப்​பிரமணி​யன் தலைமை வகித்​தார். ஆர்​பிஐ சென்னை மண்டல பொது மேலா​ளர் ராஜ்கு​மார் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​று, உரிமை கோரப்​ப​டாத தொகை​களின் காசோலைகளை உரிய​வர்​களிடம் ஒப்​படைத்​தார்.

பின்​னர், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வங்​கி​கள், காப்​பீட்டு நிறு​வனங்​கள், இதர நிதி துறை​களில் 10 ஆண்​டு​களுக்கு மேல் செயல்​ப​டாத கணக்​கு​கள் அல்​லது கோரப்​ப​டாத வைப்​புத் தொகைகள், கல்வி வளர்ச்சி நிதிக்கு மாற்​றப்​படும்.

அவற்​றுக்கு உரிமை கோரி​னால், உரிய​வர்​களிடம் ஒப்​படைக்​கப்​படும். இதற்​காக சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படு​கின்​றன. தமிழகத்​தில் 1.33 கோடி கணக்​கு​களின் கீழ் ரூ.3,600 கோடி தொகை உரிமை கோரப்​ப​டா​மல் உள்​ளது.

இந்த தொகைக்​குரிய​வர்​கள் அல்​லது அவர்​களது வாரிசு​தா​ரர்​கள் udgam.rbi.org.in என்ற தளத்​தில் சரி​பார்த்​துக்​கொள்​ளலாம். ஆதார் எண், பான் கார்​டு, இருப்​பிடச் சான்​றிதழ் உள்​ளிட்ட ஆவணங்​களு​டன் சம்பந்தப்பட்ட வங்​கிக் கிளை​களை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார். வேலூர் மாவட்ட முன்​னோடி வங்கி மேலா​ளர் சசிக்​கு​மார் உடனிருந்​தார்​.

<div class="paragraphs"><p>வேலூரில் உரிமை கோரப்படாத வங்கி இருப்பு மற்றும் வைப்புத் தொகைகளை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரியவர்களிடம் ஒப்படைத்தார் ஆர்பிஐ சென்னை மண்டல பொது மேலாளர் ராஜ்குமார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்</p></div>
சமையலரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு: 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in