கோ-ஆப்டெக்ஸ்-ல் 'ரெடி டு வேர்' சேலைகள் அறிமுகம்

கோ-ஆப்டெக்ஸ்-ல் 'ரெடி டு வேர்' சேலைகள் அறிமுகம்
Updated on
1 min read

தமிழகத்தின் பாரம்பரியத்தை காக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், காலத்துக்கு ஏற்ப புதுமை களை அறிமுகப்படுத்தவும் கோ-ஆப்டெக்ஸ் தொடர்ந்து முன் னோடியாக செயல்படுகிறது.

மாற்றம் அடையும் வாழ்க்கை முறை, வேலைப் பளு நிறைந்த அன்றாட வாழ்வு, இளம் தலைமுறையின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாரம்பரிய சேலையின் அழகையும் நவீன உடை வசதியையும் ஒருங் கிணைக்கும் வகையில், கோ-ஆப்டெக்ஸ் ரெடி டு வேர் சேலைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை விற் பனை நிலையத்தில்,கோ-ஆப் டெக்ஸ் ரெடி டு வேர் சேலை களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் காதி துறை அரசு செயலர் வே. அமுதவள்ளி, கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக் குநர் கவிதா ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, கோ-ஆப் டெக்ஸ் அதிகாரிகள் கூறும்போது, "குறைந்த நேரத்தில் அணியக்கூடியது. நேர்த்தி யான மடிப்புகள், அழகான தோற்றம், கைத்தறி தனித்து வத்தை பேணிய வடிவமைப்பு ஆகியவை ஒரு சேர கொண்ட இந்த ரெடி டு் வேர் சேலைகள், இளம் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் முதல்முறையாக சேலை அணி பவர்கள் அனைவரையும் ஈர்க் கும்" என்றனர்.

கோ-ஆப்டெக்ஸ்-ல் 'ரெடி டு வேர்' சேலைகள் அறிமுகம்
லடாக்​கில் ‘துரந்​தர்’ படத்​துக்கு வரி விலக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in