

மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி முந்தைய அளவான 5.25 சதவீதத்தில் இருந்து 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு, ரெப்போ வட்டி 5.50% ஆக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகள் வழங்கும் வீடு, வாகனம் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு மாதத்துக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெறும். அப்போது சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றுவது தொடர்பான முடிவும் அடங்கும். அதன்படியே, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 97 வரை சரிவு போன்ற காரணங்களாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2026-27 நிதியாண்டுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 5.2% ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநரின் உறுதி:
நிதிக் கொள்கை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், “விலைவாசி நிலைத்தன்மை மற்றும் நிதி நிலைத்தன்மை இரண்டும் நீண்டகால நிலையான வளர்ச்சிக்கு அவசியம். எனவே அவற்றுக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.
அதேபோல், உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், பொருளாதாரத்தின் மீள்தன்மையை மேலும் அதிகரிக்கும் கொள்கைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து செயல்படுத்தும்,” என்று கூறினார்.
ரெப்போ விகிதம்?
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். ரிசர்வ் வங்கி தற்போது இதில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் இப்போதைக்கு உயராது எனத் தெரிகிறது. ஏனெனில், வழக்கமாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும்.
கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து 5.25 சதவீதமாக ஆர்பிஐ நிர்ணயித்தது. இதுவரை அந்த விகிதம் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.