இந்​தி​ய - அமெரிக்க வர்த்தக உறவை வலுப்​படுத்த பியூஷ் கோயல்​ - ஹோவர்ட் லுட்​னிக் முக்கிய பேச்​சு​வார்த்தை

இந்​தி​ய - அமெரிக்க வர்த்தக உறவை வலுப்​படுத்த பியூஷ் கோயல்​ - ஹோவர்ட் லுட்​னிக் முக்கிய பேச்​சு​வார்த்தை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தியா மற்​றும் அமெரிக்கா இடையி​லான வர்த்தக உறவை வலுப்​படுத்​து​வது தொடர்​பாக மத்​திய வர்த்​தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தக அமைச்​சர் ஹோவர்ட் லுட்​னிக் மற்​றும் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் ஆகியோர் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்தினர்.

இந்தியாவுக்கு அமெரிக்கா 18 சதவீத வர்த்தக வரி விதித்தது. ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து அந்த வரி விதிப்பு விவகாரத்தில் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் அமைச்சர் பியூஷ் கோயல் எக்ஸ் வலை​தளப் பதி​வில் தெரி​வித்​துள்​ள​தாவது: அமெரிக்க வர்த்தக அமைச்​சர் ஹோவர்ட் லுட்​னிக் மற்​றும் அமெரிக்​கத் தூதர் செர்​ஜியோ கோர் ஆகியோரைச் சந்​தித்​த​தில் மகிழ்ச்​சி.

இரு நாடு​களுக்கு இடையி​லான வர்த்​தகம் மற்​றும் பொருளா​தா​ரக் கூட்​டாண்​மையை மேலும் வலுப்​படுத்​து​வது தொடர்​பாக மிக​வும் பயனுள்ள ஆலோ​சனை​கள் இந்த சந்​திப்​பின்​போது மேற்​கொள்​ளப்​பட்​டன.இவ்​வாறு கோயல் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா மற்​றும் அமெரிக்கா ஆகிய இரு நாடு​களும் தங்​களது இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதற்​கட்​டத்​திற்​கான சட்​டப்​பூர்வ வரைவு​களை இறுதி செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளன. இத்​தகைய சூழலில், இந்த உயர்​மட்ட அளவி​லான சந்​திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்​தி​ய - அமெரிக்க வர்த்தக உறவை வலுப்​படுத்த பியூஷ் கோயல்​ - ஹோவர்ட் லுட்​னிக் முக்கிய பேச்​சு​வார்த்தை
என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு புத்தகத்துக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in