நயாரா பங்க்-குகளில் பெட்ரோல் விலை ரூ.5, டீசல் ரூ.3 அதிகரிப்பு

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on: 
1 min read

சென்னை: நாடு முழுவதும் உள்ள தனியாருக்கு சொந்தமான நயாரா பங்க்-குகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நயாராவின் 7,000-க்கும் மேற்பட்ட பங்க்-குகளில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

முன்னதாக, மார்ச் மாதத்தில், இதே காரணத்துக்காக நாயாரா நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியது. எனினும், அதன் பிறகு கச்சா எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து, ஜூலை மாதம் அந்த விலை உயர்வு வாபஸ் பெறப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அதேவேளையில், நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான 1,04,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்-குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
“புதுச்சேரி இப்போது கொலைச்சேரியாக மாறிவிட்டது” - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in