ஆரக்கிள் நிறுவனத்தில் 12,000 ஊழியர் நீக்கம்

ஆரக்கிள் நிறுவனத்தில் 12,000 ஊழியர் நீக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் ஆஸ்​டின் நகரைத் தலைமையிட​மாகக் கொண்டு செயல்​படும் மென்​பொருள் நிறுவனமான ஆரக்கிள், இந்​தி​யா​வில் பணியாற்றும் சுமார் 12,000 ஊழியர்​களைப் பணிநீக்​கம் செய்​துள்​ளது. இது, உலகளா​விய அளவில் அந்​நிறு​வனம் மேற்​கொண்டு வரும் 30,000 ஊழியர்​களின் பணிநீக்க நடவடிக்​கை​யின் ஒரு பகுதியாகும்.

ஆரக்​கிள் நிறு​வனம், தனது செயல்​பாடு​களை முறைப்படுத்​தும் நோக்​கில் பல்​வேறு அதிரடி முடிவு​களை எடுத்​துள்​ளது. இது தொடர்​பாக ஊழியர்​களுக்கு அந்நிறுவனம் அனுப்​பி​யுள்ள மின்​னஞ்​சலில், ‘‘நிறுவனத்தில் மேற்​கொள்ளப்​பட்டு வரும் ஏஐ உள்​ளிட்ட பல்​வேறு கட்​டமைப்பு மாற்றங்​கள் காரண​மாக, தற்​போது நீங்​கள் வகிக்​கும் பணி​யிடம் தேவையற்ற ஒன்​றாகக் கருதப்​படு​கிறது. எனவே, துர​திர்​ஷ்ட​வச​மாக இந்த நீக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்​ளது.

இந்​தி​யா​வில் ஆரக்​கிள் நிறு​வனத்​திற்கு மொத்​தம் 30,000 ஊழியர்​கள் உள்ள நிலை​யில், தற்​போது சுமார் 40% பணியாளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். மேலும், அடுத்த ஒரு மாதத்​திற்​குள் மற்​றுமொரு கட்ட பணிநீக்​கம் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்​ளது.

மேலும், பணிநீக்​கம் செய்​யப்​பட்ட ஊழியர்​களுக்கு ஆரக்​கிள் நிறுவனம் சில நிதி​யுதவி​களை அறி​வித்​துள்​ளது. அதன்​படி, ஓராண்டு பணி முடித்​தவர்​களுக்கு 15 நாட்​களுக்​கான ஊதி​யம், விடுப்​புத் தொகை மற்​றும் பணிக்​கொடை, ஒரு மாத நோட்​டீஸ் காலத்​திற்​கான ஊதி​யம் மற்​றும் கூடுதலாக இரண்டு மாத ஊதி​யம் ஆகியவை சலுகைகளாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

ஆரக்கிள் நிறுவனத்தில் 12,000 ஊழியர் நீக்கம்
அரூர் கேட்டால் திமுக அரக்கோணம் கொடுத்தது; பல்லாவரம் கேட்டால் பண்ருட்டி கிடைத்தது - திருமாவளவன் ஆதங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in