

புதுடெல்லி: ரயில் பயணிகள் தற்போது அனுமதிக்கப்பட்ட இலவச வரம்புக்கு மேல் கூடுதல் லக்கேஜை எடுத்துச் செல்ல, ரயில் புறப்படுவதற்கு முன் பார்சல் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டியுள்ளது.
இந்நிலையில், பயணச்சீட்டை முன்பதிவு செய்யும்போதே கூடுதல் உடைமைகளை தெரிவித்து முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் வசதியை ரயில்வே துறை இன்று (ஜூலை 31) அறிமுகப்படுத்துகிறது.
உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள், http://www.parcel.indianrail.gov.in என்ற இணையதளத்தில் பயணம் தொடங்கும் மற்றும் முடிவடையும் நிலையங்கள், ரயில் எண்கள், பார்சல் விவரம் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்து கூடுதல் உடைமைகளை முன்பதிவு செய்யலாம்.