கடல் உணவு தொழிலை மேம்படுத்த மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிப்பு

கடல் உணவு தொழிலை மேம்படுத்த மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: கடல் உணவுத் தொழில், கடல் சார் ஏற்​றும​தியை மேம்​படுத்​தும் வகை​யில் பட்​ஜெட்​டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்​ளன.

மத்​திய பட்​ஜெட்​டில் கடல் உணவுத் தொழிலுக்​கும், கடல் சார் ஏற்றும​திக்​கும் பல்​வேறு சலுகைகளை நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் அறி​வித்​தார். இந்​தத் துறை​களை மேம்​படுத்​தும் நோக்கிலும் அமெரிக்​கா​வின் வரி விதிப்​பால் பாதிக்​கப்​பட்ட துறையை ஊக்​குவிக்​கும் வகை​யிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்​ளன.

அதன்​படி, கடல் உணவுத் தொழிலுக்​குத் தேவை​யான குறிப்​பிட்ட மூலப்​பொருட்​களின் இறக்​கும​திக்கு வரி​கள் ரத்து செய்​யப்பட உள்​ளது. நாட்​டின் கடல் எல்​லைக்கு அப்​பால் பிடிக்​கப்​படும் மீன்கள் இறக்​குமதி வரி​யின்றி இந்​தி​யா​வுக்​குள் கொண்டு வரப்படலாம். மேலும் வெளி​நாட்டு துறை​முகங்​களில் தரையிறக்கப்படும் அத்​தகைய மீன்​கள் ஏற்​றும​தி​யாகக் கருதப்படும் என்று நிதியமைச்​சர் தனது பட்​ஜெட் உரை​யில் தெரிவித்​தார்​.

இந்த மாற்​றங்​களைச் செயல்​படுத்த, இந்​தி​யா​வின் பிராந்​திய நீர்நிலைகளுக்கு அப்​பால் மீன் பிடிக்க அதன் அதி​கார வரம்பை விரிவுபடுத்​து​வதற்​காக, 1962-ம் ஆண்டு சுங்​கச் சட்​டத்​தில் திருத்தங்​கள் செய்​யப்​படும் என்​றும் பட்​ஜெட்​டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் உணவுத் தொழிலும் கடல் சார் ஏற்றுமதியும் மேம்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

கடல் உணவு தொழிலை மேம்படுத்த மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிப்பு
20 கோடி பார்​வை​களை கடந்​தது ‘ஜெயிலர்’ பட ‘ஹுக்​கும்’ பாடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in