எப்சிஎன்ஆர் திட்டத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்த என்ஆர்ஐ-கள்

எப்சிஎன்ஆர் திட்டத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்த என்ஆர்ஐ-கள்
Updated on
1 min read

புதுடெல்லி: வெளி​நாடு​களில் வசிக்​கும் இந்​தி​யர்​கள் தங்​களது வெளி​நாட்டு வரு​மானத்தை இந்​தி​யா​வில் டெபாசிட் செய்ய அனு​ம​திப்​ப​தற்​காக, எப்சிஎன்ஆர் (பி) (Foreign Currency Non-Resident (Bank)) என்ற திட்​டத்​தை, இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிமுகப்​படுத்​தி​யது. இதில் அமெரிக்க டாலர் போன்ற வெளி​நாட்டு நாண​யங்​களில் பணத்தை டெபாசிட் செய்​ய​லாம்.

அதை இந்​திய ரூபா​யாக மாற்ற வேண்​டிய அவசி​யம் இல்​லை. எப்சிஎன்​ஆர் (பி) டெபாசிட்​டு​கள் குறிப்​பிட்ட காலத்​துக்​கான நிரந்தர வைப்​புக் கணக்​கு​களாகும். இதில் முதலீடு செய்​யப்​படும் அசல் தொகை​யும், வட்​டி​யும் வெளி​நாட்டு நாண​யத்​திலேயே வழங்​கப்​படும். இந்​நிலை​யில், இத்​திட்​டத்​தின் கீழ் திரட்​டப்​பட்ட தொகை 100 பில்​லியன் டாலரை (ரூ.9.47 லட்​சம் கோடி) எட்டியுள்ளது.

என்​ஆர்​ஐ-களிடம் இருந்து பெரு​மள​வில் வந்த டாலர் வரத்​து, இந்தியா​வின் அந்​நியச் செலா​வணி கையிருப்பை வரலாறு காணாத அளவுக்கு 729.3 பில்​லியன் டால​ராக (ரூ.68.88 லட்சம் கோடி) உயர்த்​தி​யுள்​ளது. மத்​திய கிழக்​குப் போர், கச்சா எண்ணெய் விலை​யில் ஏற்​பட்ட ஏற்ற இறக்​கம் மற்​றும் சரிந்து வரும் இந்​திய ரூபாயை ஆதரிப்​ப​தற்​கான நடவடிக்​கைகள் காரண​மாக நாட்​டின் அந்​நியச் செலா​வணி கையிருப்பு அழுத்தத்துக்கு உள்​ளாகி​யிருந்த நிலை​யில் இந்த உயர்வு ஏற்பட்டுள்​ளது.

அதிக அளவி​லான பண வரவு ஏற்​பட்​டால், பின்​னர் அந்த நிதி வெளி​யேறு​வதற்​கான அபா​யம் அதி​கரிக்​கலாம் என்ற கவலை எழுந்​ததைத் தொடர்ந்​து, முதலில் செப்​.30-ம் தேதி வரை செயல்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்த இந்த திட்​டத்தை இந்​திய ரிசர்வ் வங்கி கடந்த ஆக.31-ம் தேதி​யுடன் நிறுத்தி விட்​டது. எனினும், ஏற்கெனவே ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்ள டெபாசிட்​களுக்​கான ஸ்வாப் வசதியை செப். 11-ம் தேதி வரை வங்​கி​கள் பயன்​படுத்​த அனு​ம​திக்​கப்​படும்​ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்சிஎன்ஆர் திட்டத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்த என்ஆர்ஐ-கள்
திமுக ஆட்சியில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in