“பணம் கொடுத்து இ20 பெட்ரோலுக்கு எதிராக போராட்டம்” - நிதின் கட்கரி குற்றச்சாட்டு

“பணம் கொடுத்து இ20 பெட்ரோலுக்கு எதிராக போராட்டம்” - நிதின் கட்கரி குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

புதுடெல்லி: பணம் கொடுத்து இ20 பெட்ரோலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டி உள்ளார்.

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க கடந்த 2001-ம் ஆண்டில் பெட்ரோலில் 5% எத்தனால் கலக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2022-ல் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. இது, இ20 பெட்ரோல் என்றழைக்கப்படுகிறது. எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் இன்ஜின் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இதைத் தொடர்ந்து இ20 பெட்ரோலுக்கு எதிராக கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் இ20 பெட்ரோலுக்கு எதிராக குரல் எழுப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: மூன்று மாதங்களுக்கு முன்பாக இ20 பெட்ரோலுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவை அனைத்தும் ஓய்ந்து விட்டன. பணம் கொடுத்தே இ20 பெட்ரோலுக்கு எதிராக பிரச்சாரம், போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இப்போதைய நிலையில் பெட்ரோலில் 20% எத்தனால் மட்டுமே கலக்கப்படும். இந்த அளவை உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை. மத்திய அரசின் இ20 பெட்ரோல் திட்டத்தால் கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறைந்திருக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பது அதிகரித்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சில குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சாலை திட்டங்கள் குறித்து ஆண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தில் சமரசத்துக்கே இடமே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“பணம் கொடுத்து இ20 பெட்ரோலுக்கு எதிராக போராட்டம்” - நிதின் கட்கரி குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்த பட்சம் ரூ.50 ஆக நிர்ணயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in