பொருளாதார அதிர்ச்சியை தாங்கும் இந்தியா மீது ‘மூடிஸ்’ நம்பிக்கை

பொருளாதார அதிர்ச்சியை தாங்கும் இந்தியா மீது ‘மூடிஸ்’ நம்பிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: ‘மூடிஸ்' மதிப்பீட்டு நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது: வெளி நாட்டுச் செலாவணி கையிருப்பு மற்றும் தெளிவான நிதிக் கொள்கைகளால் இந்தியா வருங்கால பொருளாதார அதிர்ச்சிகளையும் திறம்பட சமாளிக்கும் நிலையில் உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க இந்தியாவிடம் வலுவாக உள்ள அந்நியச் செலாவணி இருப்பும் உதவுகிறது. எனினும், அதிக கடன் சுமை, நிதிப் பற்றாக்குறை போன்றவை நெருக்கடிகளை எதிர்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தக்கூடும்.

இந்தோனேசியா, பிரேசில் போன்ற நாடுகளுடன் ஒப்பிடு கையில், இந்தியாவின் உள்நாட்டுச் சந்தை முதலீடுகள் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகள் மிகவும் சீராக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அதிர்ச்சியை தாங்கும் இந்தியா மீது ‘மூடிஸ்’ நம்பிக்கை
தவெகவின் ‘இன்ஸ்டன்ட்’ வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம் - பெரிய கட்சிகளை காவு வாங்கிய ‘அல்காரிதம்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in