வேளாண் விளைபொருள் மதிப்பு கூட்டும் மையம் அமைக்க ரூ.1.50 கோடி மானியம்: அமைச்சர் அறிவிப்பு

வேளாண் விளைபொருள் மதிப்பு கூட்டும் மையம் அமைக்க ரூ.1.50 கோடி மானியம்: அமைச்சர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தொழில்​முனை​வோர் மற்​றும் நிறு​வனங்​கள் வேளாண் விளை​பொருட்​களுக்​கான மதிப்பு கூட்​டும் மையம் அமைக்க ரூ.1.50 கோடி வரை முதலீட்டு மானி​யம் வழங்​கப்​படும் என, அமைச்சர் எம்​ஆர்கே பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: விவ​சா​யிகள் பயன்​பெறும் பொருட்டு வேளாண் விளைபொருட்​களின் மதிப்​புக் கூட்​டு​தல் மற்​றும் பதப்​படுத்​தும் தொழில் தொடங்​கும் தொழில் முனை​வோர்​கள் மற்​றும் நிறு​வனங்​களை ஊக்​கப்​படுத்த சிறப்​புத் திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது.

இத்​திட்​டத்​தில், ரூ.10 கோடி வரையி​லான மதிப்​புக் கூட்​டு​தல் திட்​டங்​களுக்கு பொது பிரி​வினருக்கு முதலீட்டு மானிய​மாக 25 சதவீத​மும், பெண்​கள் தொழில் வளர்ச்​சி​யில் பின்​தங்​கி​யுள்ள வட்​டாரங்​களில் தொடங்​கப்​படும் தொழில்​கள், ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினருக்​குக் கூடு​தலாக 10 சதவீதம் என மொத்​தம் 35 சதவீதம் என, அதி​கபட்​ச​மாக ரூ.1.50 கோடி வரை மானி​யம் வழங்​கப்​படும். இதுதவிர, அனைத்​துப் பிரி​வினருக்​கும் 5 சதவீத வட்டி மானி​யம், 5 ஆண்​டு​களுக்கு வழங்​கப்​படும்.

இத்​திட்​டத்​தில், தேர்ந்​தெடுக்கப்​படும் தொழில்​கள் வேளாண்​மை, தோட்​டக்​கலை விளை பொருட்​களின் 2-ம் நிலை அல்​லது 3-ம் நிலை பதப்​படுத்​தும் திட்​டங்​களாக இருக்க வேண்​டும். திட்ட மதிப்​பீட்​டில் பயனாளி​களின் பங்​களிப்பு குறைந்​த​பட்​சம் 5 சதவீத​மாக இருக்க வேண்​டியது அவசி​யம். மீத​முள்ள தொகை வங்​கிக் கடனாக பெறவேண்​டும்.

வேளாண் மற்​றும் தோட்​டக்​கலை பயிர்​களில் நவீன மற்​றும் புது​மை​யான மதிப்பு கூட்​டும் திட்​டங்​கள், ஏற்​றும​தித் திறன் கொண்ட விளைபொருட்​கள், விரை​வில் வீணாகக்​கூடிய காய்​கறிகள், பழங்​கள், பூக்​கள் போன்ற தோட்​டக்​கலைப் பயிர்​களில் மதிப்பு கூட்​டு​தல், மாவட்​டத்​துக்கே உரிய தனித்​து​வ​மான வேளாண் விளைப்​பொருட்​களின் மதிப்பு கூட்​டு​தல் ஆகிய​வற்​றில் ஆர்​வ​முடைய தொழில் முனை​வோர்​களை மாவட்​டங்​கள் தோறும் தேர்வு செய்ய அறி​வுரை வழங்​கப்​பட்​டுள்​ளது.

இத்​திட்​டத்​தில், பயன்​பெற ஆர்​வ​முள்ள வேளாண் தொழில்​ முனை​வோர்​கள் விரி​வான திட்ட அறிக்கை தயாரித்​து, வங்​கி​யில் கடன் ஒப்​புதல் பெற வேண்​டும். அதன் பின்​னர், மானி​யம் பெறு​வதற்​கான விண்​ணப்​பங்​கள் மாவட்ட தொழில்​நுட்​பக்​குழு மற்​றும் மாநில திட்ட ஒப்​புதல் குழு​வால் மதிப்​பாய்வு செய்​யப்​படும்.

தேர்ந்​தெடுக்​கப்​பட்ட தொழில்​முனை​வோருக்​கு, தொழில் திட்​டத்​திற்​கேற்ப மானி​யத் தொகை அதி​கபட்​ச​மாக ரூ.1.50 கோடி வரை ஒரே தவணை​யாக வழங்​கப்​படும். மேலும், 5 ஆண்​டுக்கு 5 சதவீதம் வட்டி மானி​யத்​துடன் கூடு​தலாக வேளாண் கட்​டமைப்பு நிதி திட்​டத்​தில் 3 சதவீத வட்டி மானிய​மும் பெறலாம்.

ஏற்​கெனவே, மத்​திய மற்​றும் மாநில அரசு திட்​டங்​களின் கீழ், வேளாண் விளை​பொருட்​கள் மதிப்​புக் கூட்​டு​தல் மற்​றும் பதப்​படுத்​தும் தொழில்​களுக்கு நிதி​யுதவி பெற்ற பயனாளி​களும் இத்​திட்​டத்​தில் பயன் பெறலாம். அவர்களுக்கு அதி​கபட்ச மானி​யத் தொகையி​லிருந்து ஏற்​கெனவே வேறு ஏதாவது திட்​டத்​தில் பெற்று வரும் மானி​யத் தொகை போக மீதித் தொகை மானிய​மாக வழங்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in