மிச்செலின் நிறுவனத்தின் டிரக் டயர் அறிமுகம்: அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டது

நாடு முழுவதும் நாளை முதல் விற்பனை
மிச்செலின் நிறுவனத்தின் டிரக் டயர் அறிமுகம்: அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டது
Updated on: 
1 min read

சென்னை: இந்​தி​யா​வில் அதிக எரிபொருள் சிக்​க​னத்தை வழங்​கும் டிரக் டயரை மிச்செலின் நிறு​வனம் அறி​முகம் செய்​துள்​ளது. இந்த புதிய டயர் நாளை முதல் விற்​பனைக்கு வர உள்​ளது.

உலகின் முன்​னணி டயர் தொழில்​நுட்ப நிறு​வன​மான மிச்​செலின், இந்​திய நெடுஞ்​சாலைகளில் பயன்​படுத்​து​வதற்​காக வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள ‘MICHELIN X Multi Energy Z2’ என்ற புதிய தலை​முறை டிரக் டயரை சென்​னை​யில் அறி​முகம் செய்​துள்​ளது. சென்​னை​யில் உள்ள மிச்​செலின் நிறு​வனத்​தின் தொழிற்​சாலை​யில் இவை தயாரிக்​கப்​படு​கின்​றன.

இதுகுறித்து மிச்​செலின் இந்​தியா நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் சாந்​தனு தேஷ்​பாண்டே கூறிய​தாவது: ஒரு வாக​னத்​தின் மொத்த இயக்​கச் செல​வில் எரிபொருள் செலவு சுமார் 50 சதவீதம் பங்​களிக்​கிறது.

இதை கருத்​தில் கொண்​டு, இந்​திய நெடுஞ்​சாலைகளுக்​காக உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த புதிய டயர், அதன் அளவைப் பொருத்து முன்​னணி போட்​டி​யாளர்​களின் டயர்​களு​டன் ஒப்​பிடும்​போது 6 முதல் 13 சதவீதம் வரை எரிபொருள் சேமிப்பை வழங்​கும்.

மிச்​செலின் நிறு​வனத்​தின் பிரத்​யேக கார்​பி​யான் கலவை தொழில்​நுட்​பம் மூலம் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த டயர், மற்ற டயர்​களை​விட 25 சதவீதம் வரை கூடு​தல் ஆயுள்​காலத்​தைக் கொண்​டுள்​ளது.

இதனால், டயர்​களை அடிக்​கடி மாற்ற வேண்டி இருக்​காது. பராமரிப்​புச் செல​வும் குறை​யும். ஈரமான மற்​றும் உலர்ந்த சாலைகளில் சிறந்த பிடிப்பை வழங்​கும் வகை​யில் இந்த டயர் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. எரிபொருள் சிக்​க​னத்​துடன் சுற்​றுச்​சூழல் பாது​காப்​பை​யும் கருத்​தில் கொண்டு தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம் வாகன ஓட்​டிகள் தங்​களது இயக்​கச் செல​வு​களைக் குறைத்​து, உற்​பத்தி திறனை அதி​கரித்​து, லாப வரம்பை வலுப்​படுத்த முடி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார். இந்த புதிய டயர் நாளை (நவ.1) முதல் விற்​பனைக்கு வரு​கிறது.

நாடு முழு​வதும் உள்ள மிச்​செலின் டயர்ஸ் அண்ட் சர்​வீஸ் கடைகள் மற்​றும் அங்​கீகரிக்​கப்​பட்ட சுமார் 300 விற்​பனை​யாளர்​களிடம் இந்த டயர் கிடைக்​கும்​ என்​று நிறு​வனம்​ தெரி​வித்​துள்​ளது.

மிச்செலின் நிறுவனத்தின் டிரக் டயர் அறிமுகம்: அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டது
தீபாவளி பலகாரம் தயாரிப்பில் விதி மீறினால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

X