தீபாவளி இனிப்பு ஆர்டரில் காஜு கத்லி முதலிடம்: அடுத்ததாக மசாலா தோசை, பன்னீர் பட்டர் மசாலா

தீபாவளி இனிப்பு ஆர்டரில் காஜு கத்லி முதலிடம்: அடுத்ததாக மசாலா தோசை, பன்னீர் பட்டர் மசாலா
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்​தாண்​டுக்​கான தீபாவளிப் பண்​டிகைக் கொண்டாட்​டத்​தில் இந்​தி​யர்​கள் அதி​கம் விரும்பி ஆர்​டர் செய்த இனிப்பு வகைகளில் காஜு கத்லி முதலிடத்​தைப் பிடித்​துள்​ளது. தீபாவளிப் பண்​டிகைக் கால விற்​பனை குறித்து ‘ஸ்விக்கி’ கூறியிருப்பதாவது: இந்​தத் தீபாவளிக் கொண்​டாட்​டத்​தின்​போது ஆன்​லைன் உணவு ஆர்​டர்​கள் 10.7 சதவீதம் அதி​கரித்​துள்​ளன.

பண்​டிகைக் காலத்​தில் நாடு முழு​வதும் அதி​கம் ஆர்​டர் செய்யப்பட்ட உணவுப் பட்​டியலில் மசாலா தோசை, காஜு கத்லி மற்​றும் பன்​னீர் பட்​டர் மசாலா முன்​னிலை வகித்​தன. இனிப்​பு​ வகையில் காஜு கத்லி முதலிடத்​தைப் பிடித்த நிலை​யில், அடுத்​த​படி​யாக மோதீச்​சூர் லட்டு, ரசகுல்லா மற்​றும் குலாப் ஜாமூன் ஆகியவை அதி​கம் ஆர்​டர் செய்​யப்​பட்​டுள்​ளன. குறிப்​பாக, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஜெய்ப்​பூர் மற்​றும் ஹைத​ரா​பாத் ஆகிய நகரங்களில் காஜு கத்லி முதலிடத்​தைப் பிடித்​தது.

தீபாவளி இனிப்பு ஆர்டரில் காஜு கத்லி முதலிடம்: அடுத்ததாக மசாலா தோசை, பன்னீர் பட்டர் மசாலா
சோனியா காந்தி சுயசரிதை தாக்கம்: பஞ்சாப் தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு சாதகமா, பாதகமா?

X