ஸ்ரீவில்லி. நகை தொழிலாளி 12 கிராம் தங்கத்தில் உருவாக்கிய மினி கார்!

12 கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்ட மினி எலெக்ட்ரிக் கார்.

12 கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்ட மினி எலெக்ட்ரிக் கார்.

Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த நகை தொழிலாளி 12 கிராம் தங்கத்தில் 1 அங்குல நீளம், அரை அங்குல உயரத்தில் எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தி உள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகை கடை பஜாரில் தங்க நகை தொழிலகம் வைத்துள்ளார்.

இவர் ஏற்கெனவே 110 கிராம் வெள்ளியில் பைக், 63 கிராம் வெள்ளியில் இயங்கும் மின்விசிறி, 4 கிராம் தங்க மோதிரத்தில் இயங்கும் கடிகாரம் ஆகியவற்றை செய்து, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு 5 கிராம் வெள்ளியில் 24-க்கு 24 மி.மீட்டர் அகலத்தில் 32 காய்களுடன் உருவாக்கிய செஸ் போர்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

தற்போது, மணிகண்டன் 12 கிராம் தங்கத்தில் 1 அங்குல நீளம், அரை அங்குல உயரத்தில் எலெக்ட்ரிக் காரை செய்துள்ளார்.

சார்ஜ் செய்தால் இயங்கும் இந்த காரில் முகப்பு விளக்கு, ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த காரை செய்ய 4 ஆண்டுகள் ஆனதாகவும், கின்னஸ் சாதனைக்கு அனுப்பி உள்ளதாகவும், மணிகண்டன் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>12 கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்ட மினி எலெக்ட்ரிக் கார். </p></div>
திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in