இந்தியாவில் முதல் முறையாக ட்ரோன் எதிர்ப்பு ஏஐ ரோந்து வாகனம் அறிமுகம்

இந்தியாவில் முதல் முறையாக ட்ரோன் எதிர்ப்பு ஏஐ ரோந்து வாகனம் அறிமுகம்
Updated on
1 min read

புதுடெல்லி: ​நாட்​டில் முதல் முறை​யாக ஏ.ஐ தொழில் ​நுட்​பத்துடன் கூடிய ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாக​னம் அறி​முகம் செய்யப்பட்டுள்​ளது. இது ஓடிக்கொண்​டிருக்​கும் போதே எதிரிநாட்டு ட்ரோன்​களை கண்​டு​பிடித்து அழிக்​கும் திறன் வாய்ந்தது.

இந்​தியா - பாகிஸ்​தான் எல்​லைப் பகு​தி​யில் ட்ரோன்​கள் மூல​மாக ஆயுதங்​களை பாகிஸ்​தான் ஐஎஸ்​எஸ் கடத்​துகிறது. மேலும், போதைப் பொருள் கடத்​தலும் டரோன்​கள் மூல​மாகவே இப்பகுதியில் நடை​பெறுகின்​றன. இந்​தாண்​டில் மட்​டும் நூற்றுக்கணக்​கான பாகிஸ்​தான் ட்ரோன்​கள் எல்​லைப் பகு​தி​யில் கண்​டு​பிடிக்​கப்​பட்டு சுட்டு வீழ்த்​தப்​பட்​டன.

இப்​பிரச்​சினைக்கு முடிவு கட்ட ‘இந்​திரஜால் ரேஞ்​சர்’ என்ற ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாக​னத்தை இந்​திரஜால் என்ற நிறு​வனம் உருவாக்​கி​யுள்​ளது. இது நாட்​டின் முதல் ட்ரோன் தடுப்பு ரோந்து வாக​னம் ஆகும்.

கவச வாக​னம் போல் உரு​வாக்​கப்​பட்ட இந்த வாக​னத்​தில் ஏஐ தொழில்​நுட்​பத்​துடன் கூடிய கருவி​கள் பொருத்தப்​பட்​டுள்​ளன. இது எதிரி நாட்​டின் ட்ரோன்​களை கண்டறிந்து , ஏவு​கணை மூலம் நடு​வானில் சுட்டு வீழ்த்​தும் திறன் வாய்ந்​தது.

வழக்​க​மாக ட்ரோன் எதிர்ப்பு கருவி​கள் ஒரு இடத்​தில் நிலை​யாக வைக்​கப்​பட்​டிருக்​கும். ஆனால் இந்த ரேஞ்​சர் வாக​னம் ஓடிக்கொண்​டிருக்​கும் போதே எதிரி நாட்டு ட்ரோன்​களை கண்டுபிடித்து அழிக்​கும் திறன் வாய்ந்​தது.

இந்த வாக​னத்தை எல்லைப் பகு​தி​யில் உள்ள ரோடு​கள், கால்வாய்கள், விவ​சாய நிலங்​கள், நகரப் பகு​தி​கள் மற்​றும் முக்கியத்​து​வம் வாய்ந்த இடங்களில் எல்​லாம் எந்த தடை​யும் இன்றி இயக்க முடி​யும்.

இதுகுறித்து இந்​திரஜால் நிறு​வனத்​தின் நிறு​வனர் கிரண் ராஜு கூறுகை​யில், "எதிரி நாட்​டின் ஒவ்​வொரு ட்ரோன்​களை​யும் அழிப்​ப​தன் மூலம் பல உயிர்​கள் காக்​கப்​படு​கின்​றன. நாட்​டின் பாது​காப்பு வலுப்​பெறுகிறது. இது​தான் இந்த புதிய கண்​டு​பிடிப்​பின் நோக்​கம்" என்​றார்.

இந்தியாவில் முதல் முறையாக ட்ரோன் எதிர்ப்பு ஏஐ ரோந்து வாகனம் அறிமுகம்
‘அஞ்சான்’ தோல்விக்கு பொறாமையும் ஒரு காரணம்: லிங்குசாமி பகிர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in