பயணிகளுக்கு ரூ.10,000 ‘வவுச்சர்’ - இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு

பயணிகளுக்கு ரூ.10,000 ‘வவுச்சர்’ -  இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: விமான சேவை​கள் ரத்​தால் பாதிக்​கப்​பட்ட பயணி​களுக்கு தலா ரூ.10,000 மதிப்​பில் ‘வவுச்​சர்​கள்’ வழங்​கப்​படும். மேலும் மத்​திய அரசின் வழி​காட்​டு​தலின்​படி ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இழப்​பீடும் வழங்​கப்​படும் என்று இண்​டிகோ நிறுவனம் தெரி​வித்​துள்​ளது.

விமானிகள், ஊழியர்​கள் பற்​றாக்​குறை காரண​மாக கடந்த ஒரு வாரத்​தில் இண்​டிகோ நிறு​வனத்​தின் 4,900 உள்​நாட்​டு, வெளிநாட்டு விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதன்​ காரண​மாக டெல்​லி, மும்​பை, சென்​னை, கொல்​கத்தா உட்பட பல்வேறு விமான நிலை​யங்​களில் ஆயிரக்​கணக்​கான விமான பயணி​கள் பரித​வித்​தனர்.

இண்​டிகோ விமான சேவை​கள் பாதிப்பு தொடர்​பாக மத்​திய விமான போக்​கு​வரத்​துத் துறை விசா​ரணை நடத்தி வரு​கிறது. முதல் ​கட்​ட​மாக இண்​டிகோ நிறுவன விமான சேவை​களில் 10 சதவீதத்தை குறைக்க மத்​திய அரசு உத்​தர​விட்டு உள்​ளது.

இந்த சூழலில் விமான பயணி​களிடம் நன்​ம​திப்பை பெற இண்டிகோ நிறு​வனம் பல்​வேறு முயற்​சிகளை மேற்​கொண்டு வருகிறது. ரத்து செய்​யப்​பட்ட 12.5 லட்​சம் பயணச் சீட்​டு​களுக்​காக ரூ.1,158 கோடி பயணி​களுக்கு திருப்பி வழங்​கப்​பட்டு உள்​ளது.

இதைத் தொடர்ந்து இண்​டிகோ நிறு​வனம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: எங்​களது வாடிக்கையாளர்களின் நலன்​களுக்கு முன்​னுரிமை அளித்து வருகிறோம். ரத்து செய்​யப்​பட்ட பயணச் ​சீட்​டு​களுக்​கான கட்டணம் அவர​வர் வங்​கிக் கணக்​கு​களில் திருப்பி செலுத்தப்பட்டு இருக்​கிறது.

விமான சேவை ரத்​தால் கடந்த 3, 4, 5-ம் தேதி​களில் பயணி​கள் அதி​கம் பாதிக்​கப்​பட்​டனர். அவர்​களுக்கு தலா ரூ.10,000 மதிப்​பில் ‘வவுச்​சர்​கள்’ வழங்​கப்​படும். இதை பயன்​படுத்தி இண்​டிகோ விமானங்​களில் பயணம் மேற்​கொள்​ளலாம். அடுத்த 12 மாதங்​கள் வரை இந்த ‘வவுச்​சர்​கள்’ செல்​லுபடி​யாகும்.

ரூ.10,000 இழப்​பீடு: மேலும் மத்​திய அரசின் வழி​காட்​டு​தலின்​படி பாதிக்​கப்​பட்ட பயணி​களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இழப்பீடு வழங்​கப்​படும். விமான சேவை ரத்​து, கால​தாமத நேரம் ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டு இந்த இழப்​பீடு அளிக்​கப்​படும்.

பாது​காப்​பான, நம்​பக​மான விமான சேவையை வழங்க இண்டிகோ நிறு​வனம் உறுதி பூண்​டிருக்​கிறது. இவ்​வாறு அறிக்கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

பயணிகளுக்கு ரூ.10,000 ‘வவுச்சர்’ -  இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு
தங்கம் விலை ரூ.98,000-ஐ எட்டி புதிய உச்சம்; வெள்ளி விலையும் வரலாறு காணாத உயர்வு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in