இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி 5 மடங்கு அதிகரிக்கும்: 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி 5 மடங்கு அதிகரிக்கும்: 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

அடெக்கோ நிறுவனத்தின் ஆய்வில் தகவல்
Published on

மும்பை: இந்​திய விண்​வெளித் துறை​யின் மதிப்பு இன்​னும் 8 ஆண்​டு​களில் 5 மடங்கு அதி​கரிக்​கும். அப்​போது, 2 லட்​சத்​துக்​கும் அதி​க​மான வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும் என்று அடெக்​கோ நிறு​வனத்​தின் ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து அந்த நிறு​வனம் கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​யா​வின் ஏரோஸ்​பேஸ், ஆளில்லா விமானங்​கள் மற்​றும் விண்​வெளி தொழில்​நுட்​பத் துறை வரும் 2033-ம் ஆண்​டுக்​குள் ஐந்து மடங்​குக்​கும் மேலாக வளர்ச்சி காணும்.

தற்​போதைய நிலை​யில், உலக சந்​தை​யில் இந்​திய விண்​வெளிப் பொருளா​தா​ரம் சுமார் 2 சதவீத பங்​களிப்பை வழங்கி வரு​கிறது. 2033 -ம் ஆண்​டுக்​குள் இது 44 பில்​லியன் அமெரிக்க டாலர்​களாக அதாவது ரூ.4 லட்​சம் கோடி​யாக அதி​கரிக்​கும். இந்த இலக்கை அடைவதற்​கான வழி​முறை​களை அரசு ஏற்​கெனவே வகுத்து செயல்​படுத்தி வரு​கிறது. இதில் 11 பில்​லியன் அமெரிக்க டாலர் (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ1 லட்​சம் கோடி) ஏற்​றுமதி சார்ந்​தவை​யாக இருக்​கும். இதன் மூலம், உலக விண்​வெளிப் பொருளா​தா​ரத்​தில் 7 முதல் 8 சதவீதத்தை இந்​தியா கட்​டுப்​படுத்​தும் நிலை உரு​வாகும்.

இந்​திய விண்​வெளி தொழில்​நுட்ப துறை​யில் ஏற்​படும் வளர்ச்​சி​யின் மூலம் அடுத்த எட்டு ஆண்​டு​களில் பொறி​யாளர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள், தரவு விஞ்​ஞானிகள் என 2 லட்​சத்​துக்​கும் அதி​க​மானோருக்கு புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும்.

அரசு சீர்​திருத்​தங்​கள், தனி​யார் துறை பங்​கேற்பு மற்​றும் சர்​வ​தேச ஒத்​துழைப்​பு​கள் காரண​மாக இந்​திய விண்​வெளி தொழில்​நுட்​பம் வேக​மாக வளர்ந்து வரும் துறை​யாக மாறிவரு​கிறது. பெங்​களூரு, ஹைத​ரா​பாத், சென்​னை, அகம​தா​பாத், புனே போன்ற பிராந்​தி​யங்​களில் இந்த துறை​யின் தாக்​கம் அதி​க​மாக இருக்​கும்.

ககன்​யான் பணி, ஆக்​சி​யம்-4 ஐஎஸ்​எஸ் திட்​டத்​தில் இந்​தி​யா​வின் பங்​கேற்பு மற்​றும் நாட்​டின் சொந்த விண்​வெளி நிலை​யத்​தின் வளர்ச்சி ஆகிய​வற்​றால் விண்​வெளி கொள்கை ஆய்​வாளர்​கள், ரோ​பாட்​டிக்ஸ் பொறி​யாளர்​கள், ஏவி​யோனிக்ஸ் நிபுணர்​கள் ஜிஎன்சி (வழி​காட்​டு​தல், வழி​செலுத்​துதல் மற்​றும் கட்​டுப்​​பாடு) நிபுணர்​களுக்​​கான தேவை இந்​தி​யா​வில்​ கணிச​மான அளவுக்கு அதி​கரிக்​கும்​. இவ்​​வாறு அந்​த ஆய்​வில்​ கூறப்​பட்​டுள்​ளது.

இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி 5 மடங்கு அதிகரிக்கும்: 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்
மருத்துவமனை மீது மியான்மர் ராணுவம் தாக்குதல்: 34 நோயாளிகள் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in