அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி
Updated on
1 min read

மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவடைந்தது.

கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று பாகிஸ்தானில் இருதரப்புக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தோல்வியடைந்த நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சுமார் 8 சதவீதம் என அதிகரித்துள்ளதாக தகவல். மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (ஏப்.13, திங்கள் கிழமை) காலை இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. அதன்படி, மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் சுமார் 1,414 புள்​ளி​கள் வீழ்ச்​சி​யடைந்து 76,135 என்ற நிலையில் உள்ளது. மும்பை பங்குச் சந்தையின் முந்தைய வர்த்தக நாளில் 77,550.25 என சென்செக்ஸ் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, சுமார் 407 புள்​ளி​கள் சரிவடைந்து 23,643 என்ற நிலையை எட்டியது. நிஃப்டியும் முந்தைய வர்த்தக நாளில் 24,050.60 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவடைந்தது.

இதனால் டாடா ஸ்டீல், கோல் இந்தியா, என்டிபிசி, ஓஎன்ஜிசி, உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச அளவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in