இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் ரூ.96-ஐ கடந்தது

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் ரூ.96-ஐ கடந்தது
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு இது​வரை இல்​லாத அளவில் முதன்​முறை​யாக 96-ஐ கடந்து வீழ்ச்​சி​யடைந்​தது.

ஈரான் போர் மற்​றும் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஏற்​பட்​டுள்ள முடக்கம் காரண​மாக கச்சா எண்​ணெய் விலை உயர்ந்​த​தால், இந்திய ரூபா​யின் மதிப்பு கடந்த சில வாரங்​களாகவே கடுமையான அழுத்​தத்​தில் உள்​ளது. தற்​போது கச்சா எண்​ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 அமெரிக்க டாலருக்கு அரு​கிலேயே நீடிக்கிறது. இதனால் நாட்​டின் கச்சா எண்​ணெய் இறக்​குமதி செலவு அதி​கரிப்​ப​தோடு, நாட்​டின் வெளி​நாட்டு வர்த்​தகத்​தின் மீதும் அழுத்​தத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​தியா தனது கச்சா எண்​ணெய் தேவை​யில் 85 சதவீதத்​துக்கு அதி​க​மானவற்றை இறக்​குமதி செய்​வ​தால், உலகளா​விய எண்ணெய் விலை உயர்​வானது இந்​திய ரூபா​யின் மதிப்​பில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​துகிறது. சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் அமெரிக்க டாலரில் வாங்​கப்​படு​வ​தால், ரூபா​யின் மதிப்பு பலவீனமடை​யும் போது இறக்​கும​திச் செலவு மேலும் அதிகரிக்​கிறது.

இது பணவீக்​கம், எரிபொருள் கட்​ட​ணங்​கள் மற்​றும் ஒட்டு மொத்தப் பொருளா​தா​ரத்​தின் மீதான அழுத்​தத்தை அதிகரிக்கிறது. இதன் காரண​மாக ரூபா​யின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரு​கிறது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான ரூபா​யின் மதிப்பு கடுமையாக சரிந்து 96.14 ஆக நேற்று குறைந்​தது. இது இதுவரை இல்​லாத அளவில்​ ஏற்​பட்​ட வீழ்ச்​சி​யாகும்​.

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் ரூ.96-ஐ கடந்தது
வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in